சிட்ரங் புயல்: எப்போது எங்கே கரையை கடக்கிறது?.. எந்தெந்த பகுதிகளை தாக்கும்?
சென்னை: அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த காழ்வு பகுதி இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது.
வடகிழக்கு பருவமழை சீசன் அக்டோபர் 4 ஆவது வாரம் தொடங்கப்படும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதாவது 2 வாரம் தாமதமாக தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன் தினம் உருவானது. இது இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
பின்னர் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும். இது தீபாவளி பண்டிகையின் போது புயலாக மாறுகிறது. இதற்கு சிட்ரங் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை தாய்லாந்து நாடு பரிசீலனை செய்தது. இந்த நிலையில் இந்த சிட்ரங் தீபாவளி பண்டிகையின் போது வடமேற்கு பக்கமாக நகர்கிறது.

தமிழகத்தில் பாதிப்பா
தீபாவளி பண்டிகையின் போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். இந்த புயல் காரணமாக இன்று முதல் தென் கிழக்கு வங்கக் கடல் வங்கக் கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும். 24ம் தேதி புயலாக மாறும் போது மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 75 கிமீ வேகத்தில் வீசும்.

காற்று வேகம்
சில நேரங்களில் 85 கிமீ வேகத்திலும் வீசும். இதையடுத்து, 25ம் தேதி இந்த புயல் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலில் இந்த நிகழ்வு நீடிப்பதை அடுத்து, 25ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மழையும் தொடரும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் முதலாவது புயல் இதுவாகும்.

எங்கு மழை
இந்த புயலால் ஒடிஸா, மியான்மர் பகுதிகளுக்கும் பாதிப்பை கொடுக்கும் என தெரிகிறது. இந்த புயலால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும். அது போல் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் சில இடங்களில் கனமழையும் மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புண்டு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications