போஸ்டர் அடி.. அண்ணன் ரெடி! கேப்டன் சென்டிமென்ட்..மலைக்கோட்டை அரசியல்! தவெக மாநில மாநாடு இங்கே தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது அரசியல் பயணத்திற்கு தயாராகி வருகிறார். கட்சியின் முதல் மாநாட்டில் கட்சியின் கொடி, கொள்கைகள் உள்ளிட்டவை வெளியாக உள்ளது. இந்த நிலையில் அவரது கட்சியின் முதல் மாநாடு எங்கு நடைபெற இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் இடையே எழுந்திருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக நிர்வாகிகளிடம் பேசிய போது பல முக்கிய தகவல்கள் கிடைத்தன.

தற்போதைக்கு நம்பர்-1 நடிகராக தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் விஜய் அரசியல் வருகைக்கு முன்னதாக தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அரசியல் கட்சி தொடங்கப் போவதை சூசகமாக அறிவித்தார்.

Vijay Tamilaga Vettri Kazhagam Politics

அரசியலுக்கு ஏனோதானோ என்று வரக்கூடாது என தீர்க்கமாக இருந்த விஜய் தான் நற்பணி இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்து வந்தார்.

மாநில நிர்வாகிகள் நியமனம் மாவட்ட தலைவர்கள் நியமனம் என மெதுவாகவும் அதே நேரத்தில் நிதானமாகவும் அவரது செயல்பாடுகள் இருந்தது. பனையூரில் அடிக்கடி ஆலோசனை மாணவர்களுக்கு திட்ட உதவிகள் வழங்குவது என தொடர்ந்து திட்டமிட்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய் ஒரு வழியாக கட்சி பெயரையும் அறிவித்தார். 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கியுள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்துள்ளார். இப்போது கோட் படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய் தனது அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். இந்த இரு திரைப்படங்களும் முடிவடைந்த பின்னர் தான் அவரது முழு அரசியல் பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பிரம்மாண்டமாக மண்டல மாநாடுகள், சட்டமன்ற தொகுதிகளில் நடைபயணம் என அடுத்தடுத்து பல அரசியல் அதிரடிகளை அரங்கேற்ற விஜய் தரப்பு திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில் மதுரை அல்லது திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் மாநில மாநாட்டை விஜய் நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜயின் முதல் அரசியல் மாநாடு எங்கு நடைபெற உள்ளது என்பது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் சென்ற கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சேலத்தில் சில பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதன் மூலம் சேலத்தில் தான் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாடு நடைபெற இருப்பதாகவும் அதற்காகவே அவர் ஆய்வு மேற்கொண்டார் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அப்படியெல்லாம் இல்லை நடிகர் விஜய் திருச்சியில் தான் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்தப் போகிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். பொதுவாக அரசியல் கட்சிகள் தங்கள் முதல் மாநாட்டை திருச்சி அல்லது மதுரையில் நடத்துவது வழக்கம். அந்த வகையில் திருச்சியில் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருக்கிறார் நடிகர் விஜய். தமிழகத்தின் மத்திய பகுதியில் இருப்பதால் எங்கு இருந்தாலும் ரசிகர்களும் கட்சியினரும் வர ஏதுவாக இருக்கும் எனவும், போக்குவரத்து காரணங்கள், பாதுகாப்பு ரசிகர்களுக்கு செய்து தர வேண்டிய வசதிகள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு திருச்சியை விஜய் டிக்கு அடித்திருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

அதே நேரத்தில் மதுரையில் மாநாட்டை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு விஜய் கூறியுள்ளாராம். இதற்கு என்ன காரணம் என தென் மாவட்ட நிர்வாகிகளிடம் விசாரித்த போது சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த பலரும் மதுரையில் இருந்தே தங்கள் பயணத்தை தொடங்கி இருக்கின்றனர். லேட்டஸ்ட் வரவாக அரசியலில் குதித்த நடிகர் கமலஹாசனும், அதற்கு முன்னால் நடிகரும் நடிகர் சங்க தலைவராக இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை சென்ற விஜயகாந்த் மதுரையில் தான் தனது முதல் மாநில மாநாட்டை நடத்தி காட்டினார்.

செந்தூரப்பாண்டி படத்தில் தொடங்கி விஜயகாந்த் மீதான மதிப்பை பல இடங்களில் விஜய் வெளிக்காட்டி வந்திருக்கிறார். மேலும் அவரது இறுதி சடங்கில் கண்ணீர் மல்க கலந்து கொண்டது விஜயகாந்த் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கிடையே கோட் படத்திலும் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பம் மூலம் தோன்ற இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அந்த செண்டிமெண்ட்டை வைத்து மதுரையில் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை விஜய் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மதுரையும் தமிழகத்தின் மையப்பகுதியில் இருப்பதால் விமானம், ரயில், சாலை போக்குவரத்தாக ரசிகர்களும் நிர்வாகிகளும் எளிதாக வரமுடியும். எனவே திருச்சி அல்லது மதுரை தான் நடிகர் விஜயின் முதல் மாநில மாநாடு பட்டியல் நடக்கும் இடங்களில் முதல் இரு இடங்களில் இருக்கிறது. இவற்றில் ஏதாவது ஒன்றில் மாநாடு நடக்கும் எனவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கின்றனர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+