சென்னையில் நாளை மின்தடை.. காலை 9 மணி முதல் 2 மணி வரை.. ஏரியா வாரியாக முழு விவரம்
சென்னை: சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பூந்தமல்லி, அய்யப்பன்தாங்கல், கல்மண்டபம், ராயபுரம், அடையாறு, கரையான்சாவடி, துளசிதாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணன்சாவடி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நாளை விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மின்சாரம் விநியோகிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் ஒவ்வொரு ஏரியாவிலும் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். அப்படி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6மணி வரை மின் விநியோகம் இருக்காது. அதேநேரம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் பராமரிப்பு பணிகள் நடந்தால் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. நாளை பிப்ரவரி 10ம் தேதி சென்னையில் எங்கெல்லாம் மின்தடை இருக்கும் என்ற விவரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம்.

பூந்தமல்லி: செந்நீர்குப்பம், கரையான்சாவடி, துளசிதாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணன்சாவடி.
அய்யப்பன்தாங்கல்: அன்னை இந்திரா நகர், புஷ்பா நகர், விஜயலட்சுமி நகர், பாவேந்தர் நகர், ராம் தாஸ் நகர், லட்சுமி நகர், இந்திரா நகர்.
கல்மண்டபம்: கே.எல்.எம். சாலை, உசேன் மேஸ்திரி தெரு, பக்கிரி தெரு, ஷேக் மேஸ்திரி தெரு, தம்பு லேன், மார்க்கெட் லேன், ஜி.எம். பேட்டை, லோட்டஸ் ராமசாமி தெரு, ஏ.ஜே. காலனி 1 முதல் 5வது தெரு வரை, கிரேஸ் கார்டன், ஜீவரத்தினம் குவார்ட்டர்ஸ், இந்திரா நகர் குவார்ட்டர்ஸ், நியூ திருவள்ளுவர் நகர், மாரிதாஸ் தெரு, கிழக்கு மாதா, பஜார் தெரு, என்.ஆர்.டி சாலை, ஸல்மா அபார்ட்மெண்ட்.
ராயபுரம்: எம்.சி. சாலை, சிமெண்டரி சாலை, பி.வி கோவில், ராமன் சாலை, வெங்கடாசலம் தெரு, மசூதி தெரு, மணிகண்ட முதலி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, ஆதம் தெரு, மரியா தாஸ் தெரு, கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாதா சர்ச் தெரு, சிங்காரத் தோட்டம் தெரு, மீனாட்சி அம்மன் பேட்டை, டோபிகானா தெரு, வைகுண்ட நாடார் தெரு, சோமுசெட்டி தெரு, வெங்கடேசன் 1 முதல் 4 வது தெரு வரை, அம்மன் கோவில் 1 முதல் 8 வது தெரு வரை, ராஜகோபால் தெரு, பஜனை கோவில் தெரு, செல்வ விநாயகர் கோவில் தெரு, சோலையப்பன் பகுதி, நல்லப்ப வாத்தியார் தெரு, வள்ளுவன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
அடையாறு: சாஸ்திரி நகர், பெசன்ட் நகர் 1 முதல் 7 அவென்யூ, 1 முதல் 31 குறுக்குத் தெரு, சங்க காலனி, பீச் ஹோம் அவென்யூ, சி.பி.டபிள்யூ.டி குவார்ட்டர்ஸ், ரிசர்வ் வங்கி குடியிருப்பு, தாமோதரபுரம், ஊரூர் குப்பம், திருவள்ளுவர் நகர், ஓடைமா நகர், கலாஷேத்ரா காலனி வண்ணந்துறை, எல்லையம்மன் கோயில் தெரு, அண்ணா காலனி, கக்கன் காலனி, லட்சுமிபுரம், எம்.ஜி சாலை, சிவகாமிபுரம், மாலவியா அவென்யூ, ராதாகிருஷ்ணன் நகர், மருந்தீஸ்வரர் நகர், ஸ்ரீராம் நகர், அண்ணா தெரு, முத்துலட்சுமி தெரு, வால்மீகி நகர், ஆர்பிஜே காலனி, கிழக்கு மாட தெரு, கலாஷேத்ரா சாலை, வால்மீகி தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, குப்பம் கடற்கரை, சிஜிஇ காலனி, ராஜீவ் காந்தி மச்சர்ஸ் காலனி, ஜெயராம் தெரு, எல்பி சாலை, சுப்பிரமணியன் காலனி, எஸ்பிஜே காலனி, கற்பகம் கார்டன், பத்மநாப நகர் 4 மற்றும் 5 வது தெரு, பரமேஸ்வரி நகர், ஜீவரத்தினம் நகர், சாந்தி காலனி, வெங்கடேஸ்வரா நகர், அருணாசலபுரம், ராமசாமி கார்டன், பெசன்ட் அவென்யூ, அடையாறு பாலம் சாலை, ஆர்.எஸ்.காம்பவுண்ட்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications