ராஜ ராஜ சோழன் இந்துவா?.. இப்போ எதுக்கு? வந்தோமா 4 காசு சம்பாதிச்சமானு இருங்க.. கஞ்சா கருப்பு அட்வைஸ்
சென்னை: ராஜராஜ சோழன் இந்துவா முஸ்லீமா, எதுவாக இருந்தால் என்ன? என நடிகர் கஞ்சா கருப்பு ஒரு விழாவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓங்காரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே ராஜன், நடிகர் கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கஞ்சா கருப்பு, தயாரிப்பாளரின் பிரச்சினைகள் அவர் நிலையில் இருந்து யோசித்தால்தான் தெரியும். நான் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்தேன்.

தோல்வி
அப்போது ஒரு படத்தை எடுத்து தோல்வி அடைந்தேன். உடனே எனது அம்மாவிடம் நான் தோல்வி அடைந்தது குறித்து கூறினேன். அதற்கு அம்மா சொன்னார், "நீ காசு கொடுத்து படிக்காத படிப்பை சினிமாவில் நீ காசை கொடுத்து படித்துள்ளாய்" என்றார். ராஜ ராஜ சோழன் இந்துவா முஸ்லீமா என பிரச்சினை செய்கிறார்கள்.

இதெல்லாம் எதுக்கு இப்போ
எதற்கு இதெல்லாம் அவர் என்ன மதமாக இருந்தால் என்ன? படத்தை எடுத்தோமா சம்பாதித்தோமா என இருக்க வேண்டும். ராஜ ராஜ சோழனின் மதம் குறித்தெல்லாம் தேவையில்லாத விஷயம் என்றார். மேலும் இந்த படத்தில் நடித்த நடிகை இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தர ரூ 1 லட்சம் கேட்டாராம்.

கஞ்சா கருப்பு
இதை அறிந்த கஞ்சா கருப்பு அந்த நடிகையையும் திட்டி தீர்த்துவிட்டார். ராஜராஜ சோழன் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் புள்ளி வைத்தார். அன்று முதல் அதற்கு எதிர்ப்பும் ஆதரவும் என எல்லாம் கோலம் போட்டு வருகிறார்கள். ராஜ ராஜ சோழன் சைவத்தை சேர்ந்தவர். ஆங்கிலேயர்கள் காலத்தில் சைவம், வைணவம் எல்லாவற்றையும் சேர்த்து இந்து மதம் என பெயரிட்டார்கள் என்கிறார்கள் சிலர்.

எந்த மதம்
பாஜகவினரோ ராஜ ராஜ சோழன் இந்து இல்லாவிட்டால் அவரென்ன முஸ்லீமா, கிறிஸ்துவரா, பௌத்தரா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கஞ்சா கருப்பை போல் இன்னும் சிலர் அவர் எந்த மதமாக இருந்தால் என்ன எதற்காக அதை கிண்ட வேண்டும், நாட்டில் பேச வேண்டிய பிரச்சினைகள எத்தனையோ இருக்கு, அதைவிட்டுவிட்டு இதெல்லாம் தேவையா என கேட்கிறார்கள். இப்படி நாள்தோறும் ராஜராஜ சோழனின் மதம் குறித்து பேசி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications