‛‛முன்னேறும் பாஜக’’.. 10 தொகுதிகளில் 3ம் இடத்துக்கு தள்ளப்படும் அதிமுக! தந்தி டிவி சர்வே ரிசல்ட்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் 10 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 3வது இடத்துக்கு தள்ளப்படும் என தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் அதிமுகவை விட பாஜக முந்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு கடும் போட்டி கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் தொகுதி வாரியாக எந்த கட்சி வெற்றி பெறும்? என்பது தொடர்பாக தந்தி டிவி சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் இன்று வெளியாகின. அதில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக 10 தொகுதிகளில் 3ம் இடத்துக்கு தள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மத்திய சென்னை, தஞ்சாவூர், கடலூர், பெரம்பலூர், தர்மபுரி, கன்னியாகுமரி, தேனி, ராமநாதபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் அதிமுக 3ம் இடத்துக்கு தள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் அதிமுகவை விட பாஜக முந்தி 2ம் இடம் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேனியில் பாஜக கூட்டணி வேட்பாளரான அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் மற்றும் திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன், ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் ஓ பன்னீர் செல்வம் மற்றும் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கும். இதில் நூலிழையில் திமுக மற்றும திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வேலூர் தொகுதியில் பாஜகவின் கூட்டணியில் போட்டியிடும் ஏசி சண்முகம் மற்றும் திமுக வேட்பாளரான அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கும் இடையே கடும் போட்டி நிலவும். இதில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் தர்மபுரியில் திமுக வேட்பாளர் மணி மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளரான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இடையே தான் கடும் போட்டி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமரியில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய சென்னை தொகுதியில் திமுகவின் தயாநிதி மாறன் மற்றும் பாஜகவின் வினோஜ் பி செல்வம் ஆகியோர் இடையே தான் போட்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications