17 தொகுதிகளில் 20% ஓட்டுகளை தாண்டும் பாஜக.. எந்தெந்த இடங்கள் தெரியுமா? தந்தி டிவி கருத்து கணிப்பு
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி 17 தொகுதிகளில் 20 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை அள்ளும் என தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய உள்ளது. இந்நிலையில் தான் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.

வரும் தேர்தலில் அதிமுக கழற்றி விட்டதால் பாஜக தனியாக கூட்டணி அமைத்துள்ளது. அதன்படி பாஜக கூட்டணியில் பாமக, ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், ஓ பன்னீர் செல்வம் அணி, டிடிவி தினகரனின் அமமுக, ஜான் பாண்டியனின் தமமுக, ஏசி சண்முகத்தின் புதிய நிதிக்கட்சி, பாரிவேந்தரின் ஐஜேகே, தேவநாதன் யாதவின் இமகமுக உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதகளில் 19 இடங்களில் போட்டியிடுகிறது. மேலும் 5 தொகுதிகளில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். மேலும் பாமக 10 இடங்களிலும், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், ஓ பன்னீர் செல்வம் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னமான பலாப்பழத்திலும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் நேற்று இரவு வெளியாகின. அதன்படி தமிழ்நாட்டில் 17 தொகுதிகளில் பாஜக கூட்டணி கட்சியினர் 20 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தர்மபுரி, கன்னியாகுமரி, தேனி, ராமநாதபுரம், தென்சென்னை, வேலூர், திருநெல்வேலி, கோவை, மத்திய சென்னை, அரக்கோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தென்காசி, விருதுநகர், நீலகிரி, பெரம்பலூர், திருப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 20 சதவீத ஓட்டுகளை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமரி, தேனி, ராமநாதபுரம், வேலூர், திருநெல்வேலி, கோவை, நீலகிரி, தர்மபுரி ஆகிய தொகுதிகளில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பாஜகவும் அதன் கூட்டணி வேட்பாளர்களும் கடும் போட்டி கொடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications