தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி இதுதான்.. 2ம் இடத்தில் கவுண்டம்பாளையம்.. லிஸ்ட் இதோ!
சென்னை: தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.60 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கான பணிகள் நடந்து முடிந்துள்ளன.
இந்நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட தற்போது கூடுதலாக 7 லட்சம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 6,18,90,348
பெண் வாக்காளர்கள்: 3,14,85,724
ஆண் வாக்காளர்கள்: 3,03,96,330
மூன்றாம் பாலினத்தவர்கள்: 8,294
தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 39 லட்சம்.
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்ட சட்டமன்றத் தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி முதல் இடத்திலும், கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதி 2-வது இடத்திலும் உள்ளதாக சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்தம் 6,60,419 வாக்காளர்கள் உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி உள்ளது. கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் 4,62,612 வாக்காளர்கள் உள்ளனர். மிகவும் குறைந்தபட்ச வாக்காளர்கள் எண்ணிக்கை கொண்ட தொகுதி நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி. அங்கு, 1,72,140 வாக்காளர்கள் உள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications