Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்க நகையை எங்கு வைத்தால் வட்டி குறைவு.. அடமானத்தில் உள்ள நகைகளை எளிதாக திருப்பும் வழிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அவசரத்திற்கு பலர் தங்கள் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக மேம்படுத்திக் கொள்ள, மருத்துவ செலவை சமாளிக்க, வீடு வாங்க, நிலம் வாங்க, திடீர் திருமண செலவு போன்ற வாழ்வின் செலவை சமாளிக்க தங்க நகைகளை அடகு வைக்கிறார்கள். தங்க நகை அடகு வைப்போர். எங்கு அடகு வைத்தால் வட்டி குறைவு.. எளிதாக தங்க நகைகளை திருப்ப வழிகள் என்ன என்பதை பார்ப்போம்.

உங்கள் அவசர தேவைகளுக்கு தங்க நகைகளை அடகு வைக்க போகிறீர்களா.. தாராளமாக அடகு வையுங்கள். தங்க நகை அடகுவைக்க எந்த பெரிய ஆவணங்களும் தேவையில்லை.. வங்கிகளில் அடகு வைக்க வங்கி கணக்கும், தனியார் நிதி நிறுவனங்களில் என்றால் ஆதார் கார்டும் கட்டாயம் ஆகும். பலர் அவசரத்திற்கு வீட்டின் அருகில் உள்ள ஏதாவது ஒரு தனியார் அடகு நிறுவனத்திடம் அடகு வைக்கிறார்கள். சிலர் வங்கியில் சென்று வைக்கிறார்கள். சிலர் தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கிறார்கள்.

gold loan bank mortgage

பொதுவாக தங்க நகையை எங்கு அடகு வைத்தால் வட்டி குறைவு என்ற கேள்வி எழும். பொதுவாக இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளில் வட்டி குறைவாக இருக்கும். அக்ரி லோன், நான் அக்ரி லோன் என்ற இரண்டு வகைகளில் தங்க நகை கடன் வழங்கப்படுகிறது. அக்ரி லோனில் வைத்தால் வட்டி மிகக்குறைவாக இருக்கும்.

கனரா வங்கி தங்க நகை வட்டி விகிதம்: உதாரணமாக கனரா வங்கியில் நகைக்கடன் 7.25 சதவீதம் என்கிற அளவில் ஆரம்பிக்கும். கிராமுக்கு 5340 ரூபாய் வரை நகைக்கடன் தருவார்கள். 3 மாதம் முதல் 12 மாதம் வரை திரும்ப செலுத்தும் காலமாக இருக்கும். வெறும் 30 நிமிடத்தில் கடன் கிடைக்கம்.

எஸ்பிஐ தங்க நகை வட்டி விகிதம்: எஸ்பிஐ வங்கியை பொறுத்தவரை 7.30% முதல் தங்க நகைக்கடன் வழங்கப்படுகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 7.25 சதவீதம் வட்டி என்கிற அளவு தொடங்கி தங்க நகை கடன் வழங்கப்படுகிறது. ஹெச்டிஎப்சி வங்கியை பொறுத்தவரை 8.50 சதவீதம் முதல்கடன் வழங்கப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கியை பொறுத்தவரை 10.50 சதவீதம் முதல் தங்க நகைக்கடன் வழங்குகிறது. ஆக்சிஸ் வங்கி 13.50 சதவீதம் முதல் தங்க நகைக்கடன் வழங்குகிறது. முத்தூட் பின்கார்ப் 12 சதவீதம் முதல் தங்க நகைக்கடன் வழங்குகிறது. சிட்டி யூனியன் வங்கி 9.7 சதவீதம் என்கிற அளவில் தங்க நகைக்கடன் வட்டி விகிதம் இருக்கிறது.

தங்க நகை கடன் அதிக பணம்: தங்க நகைக்கடன் வட்டி விகிதம் 7.25 சதவீதம் முதல் 14 சதவீதம் அளவிற்கு அரசு மற்றும் தனியார் வங்கிகளில் வட்டி விகிதங்கள் உள்ளன. நீங்கள் எந்த வங்கியில் நகைக்கடன் வாங்க விரும்புகிறீர்களோ அங்கு வாங்கலாம். அதிக கடன் தொகை தேவை என்றால், தனியார் வங்கிகளை நாடலாம். ஆனால் வட்டி அதிகமாக இருக்கும். ஆனால் குறைவான பணமே போதும் என்றால், பொதுத்துறை வங்கிகளில் தங்க நகைக்கடன் வாங்கலாம்.

நிதி நிறுவனங்களில் தங்க நகை அடகு : அதேநேரம் உடனே திருப்ப்பி கொள்ள போகிறீர்கள் என்றால் மட்டும் நிதி நிறுவனங்களில் (ரிசர்வ் வங்கி அங்கீகாரம் உள்ள நிதி நிறுவனங்கள்) வைக்கலாம். அதாவது ஒரு வாரம், ஒரு மாதத்தில் திருப்பி கொள்ள போகிறீர்கள் என்றால், முயற்சிக்கலாம். அதுவும் குறைந்த தொகை என்றால் மட்டும் ஒகே.. மற்றபடி முடிந்தவரை வங்கிகளிலும், குறிப்பாக பொதுத்துறை வங்கிகளில் தங்க நகை கடன் வாங்கலாம்.. அப்படி செய்தால் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். கடன் பணம் அதிகம் கிடைக்கிறது என்பதற்காக அதிகபட்ச தொகை வாங்கிவிட்டு வட்டி கட்ட முடியாமல் நகையை இழந்துவிடாதீர்கள்.

தங்க நகை கடனை அடைக்கும் வழிகள்: அதேபோல் தங்க நகைக்கடனை பர்சனல் லோன் போல் பாவித்து மாதம் மாதம் கணிசமான தொகையை கட்டி வந்தால் எளிதாக தங்க நகைக்கடனை அடைக்கலாம். மொத்தமாக கட்டி தங்க நகைக்கடனை அடைப்பது என்பது இன்றைய சூழலில் பலருக்கு சாத்தியமே இல்லை.. எனவே கையில் பணம் கிடைக்கும் போது எல்லாம் நகைக்கு பணத்தை கட்டினால் எளிதாக கடனை கட்டி முடித்துவிடலாம். வட்டியும் வேகமாக குறையும். மொத்தமாக ஓராண்டு முடிய போகும் போது என்றால் பெரிய தொகையை வட்டியாகவும், அசலாகவும் கட்ட வேண்டியதிருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+