ஆபீஸ் மீட்டிங்ல நீங்க எந்த சீட்ல உட்காருவீங்க? உங்க 'சீட்' செலக்ஷன் சொல்லும் ரகசியங்கள் இதோ!
சென்னை: உங்கள் அலுவலகத்தின் மீட்டிங்கிற்காக செல்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம், அங்கு 9 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. நீங்கள் எந்த நாற்காலியில் உட்காருவீர்கள் என்பதை வைத்து உங்கள் குணத்தை நாங்கள் சொல்வோம்.
நண்பர்களே, நாம எப்படி டிரஸ் பண்றோம், என்ன கலர் பிடிக்கும்னு சொல்றதை விட, நாம தெரியாம செய்யுற சின்ன சின்ன விஷயங்கள் நம்மளோட மொத்த கேரக்டரையும் அக்குவேறு ஆணிவேறா பிரிச்சு காட்டிடும். அப்படிப்பட்ட ஒரு சுவாரஸ்யமான 'பர்சனாலிட்டி டெஸ்ட்' தான் இது.

இப்போ ஒரு கற்பனை பண்ணிக்கோங்க... ஒரு பெரிய ஆபீஸ் மீட்டிங் நடக்குது. ஒரு பெரிய செவ்வக மேசையைச் சுத்தி 9 சேர் இருக்கு. அந்த இடமே ரொம்ப சீரியஸா, ஒரு மாதிரி 'கப்-சிப்'னு இருக்கு. அந்த மேசையோட மெயின் ஹெட் ஒரு இடத்துல உட்கார்ந்திருக்காரு. நீங்க உள்ளே போறீங்க... அங்க இருக்குற 9 சீட்ல நீங்க எதை செலக்ட் பண்ணுவீங்க? யோசிக்காம, உங்க மனசுக்கு முதல்ல தோணுன அந்த நம்பரை மட்டும் மனசுல வச்சுக்கோங்க.
வச்சுட்டீங்களா? இப்போ நீங்க யாருன்னு நீங்களே தெரிஞ்சுக்கோங்க!
இருக்கை 1: தலைவரின் வலது கரம்!
நீங்க எப்போவுமே 'பவர்' பக்கத்துல இருக்கணும்னு நினைக்கிற ஆளு. "பாஸ் இருக்காரா? நான் கூடவே இருப்பேன்" அப்படின்னு சொல்ற ஒரு விசுவாசி நீங்க. எந்தச் சிக்கல் வந்தாலும் பொறுப்பேத்துக்க ரெடியா இருப்பீங்க. மேலிடத்துல இருந்து வர்ற உத்தரவை தட்டாம செய்யுற ஒரு சூப்பர் டீம் பிளேயர் நீங்க தான்!
இருக்கை 2: ரிலாக்ஸ்டு பார்ட்னர்!
நீங்க ஒரு 'அமைதிப்படை'. மெயின் ஹெட் பக்கத்துல தான் இருப்பீங்க, ஆனா எதிலயும் அவசரப்பட மாட்டீங்க. மத்தவங்க சொல்றதை நிதானமா கேட்டுட்டு, ரெண்டு பக்கமும் சண்டையைத் தீர்த்து வைக்கிற நல்லிணக்கவாதி நீங்க. உங்களுக்குள்ள ஒரு அழகான அமைதி ஒளிஞ்சிருக்கு!
இருக்கை 3: நிதானமான புத்திசாலி!
"பாயுறதுக்கு முன்னாடி ஒருவாட்டி யோசிப்போம்"னு நினைக்கிற கேரக்டர் நீங்க. எச்சரிக்கை உணர்வு உங்களுக்கு ரொம்ப அதிகம். ஒரு விஷயத்தைச் செய்யுறதுக்கு முன்னாடி நூறு தடவை பிளான் பண்ணுவீங்க. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க மாட்டீங்க. நீங்க ஒரு 'மிஸ்டர் பெர்ஃபெக்ட்' ரகம்!
இருக்கை 4: கேள்வி கேட்கும் கில்லி!
உங்களுக்கு ஒரு 'நோ' சொல்ற தைரியம் அதிகம். மத்தவங்க எல்லாரும் "ஆமாம்"னு சொன்னா, நீங்க "ஏன் ஆமாம்?"னு கேட்பீங்க. மத்தவங்களுக்குச் சங்கடமா இருந்தாலும் பரவாயில்லைனு, நச்சுனு கேள்வி கேட்டு எல்லாரையும் யோசிக்க வைப்பீங்க. நீங்க ஒரு செம ஷார்ப் ஆன ஆளு!
இருக்கை 5: நேருக்கு நேர் மோதும் சிங்கம்!
நீங்க எதையும் ஒளிவுமறைவில்லாம பேசுற ரகம். மெயின் ஹெட்டுக்கு நேர் எதிரா உட்கார்ந்து, "எனக்கு இது சரின்னு படல"ன்னு அடிச்சுப் பேசுவீங்க. உங்க தன்னம்பிக்கை ரொம்ப அதிகம். அதிகாரத்தைக் கண்டு பயப்படாம உங்க கருத்துக்காக வாதிடுவீங்க!
இருக்கை 6: அமைதியான அப்சர்வர்!
நீங்க ஒரு 'சைலண்ட்' கில்லர்னு கூட சொல்லலாம். மீட்டிங்ல பெருசா பேச மாட்டீங்க, ஆனா அங்க என்ன நடக்குதுனு ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் நோட் பண்ணுவீங்க. நீங்க பேசுறது கம்மியா இருக்கலாம், ஆனா நீங்க ஒரு வார்த்தை சொன்னா அது ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கும்!
இருக்கை 7: கெத்தான கேரக்டர்!
நீங்க ரொம்ப செலக்டிவ். "இந்த மீட்டிங்ல எனக்கு ஏதாவது ஒரு முக்கியத்துவம் இருந்தா மட்டும் தான் நான் வருவேன்"னு நினைப்பீங்க. சும்மா போயிட்டு வர்றது உங்களுக்குப் பிடிக்காது. உங்களோட பங்களிப்பு மேட்டருக்கு வேணும்னு நினைச்சா மட்டும் தான் நீங்க முழு வீச்சுல இறங்குவீங்க!
இருக்கை 8: ஜாலியான டீம் லீடர்!
நீங்க வந்தாலே அந்த இடமே கலகலப்பாகிடும். ரொம்ப சிம்பிளா, மனிதாபிமானத்தோட நடந்துப்பீங்க. எல்லாரையும் ஒண்ணா சேர்த்து கொண்டு போறதுல நீங்க தான் கில்லாடி. ஒரு இறுக்கமான சூழலையும் உங்க பேச்சால ஜாலியா மாத்த உங்களால முடியும்!
இருக்கை 9: நம்பிக்கையான தம்பி/தங்கை!
தலைவருக்கு ரொம்ப பக்கத்துல இருந்து அவங்க சொல்றதை அப்படியே ஃபாலோ பண்ணணும்னு நினைப்பீங்க. உங்களுக்கு ஒரு கைடு அல்லது மெண்டார் வேணும்னு எதிர்பார்ப்பீங்க. ஒரு பெரிய ஆளுமையோட சப்போர்ட்ல இருந்துக்கிட்டு, உங்களை நீங்க வளர்த்துக்க நினைக்கிற கியூட்டான கேரக்டர் நீங்க!
என்ன பாஸ்... உங்க சீட் நம்பர் இதுதானா? உங்க கேரக்டரோட மேட்ச் ஆகுதான்னு பாருங்க! இது ஒரு சயின்ஸ் இல்லைனாலும், நம்ம ஆழ்மனசு நமக்கே தெரியாம செய்யுற மேஜிக் தான் இந்தத் தேர்வுகள். உங்க பிரண்ட்ஸுக்கும் இதை அனுப்பி அவங்க எந்த சீட்னு தெரிஞ்சுக்கோங்க!
-
தாம்பரம், செங்கல்பட்டு மின்சார ரயில்கள் மேலும் ரத்து... இரவில் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு -
நெடுஞ்சாலைகளா? நகரச் சாலைகளா? டெல்லி பிளானை கையில் எடுத்த ஸ்டாலின்.. தரமான 'செக்' மேட்! -
ABP: மீண்டும் திமுகவின் கோட்டையாகிறதா சென்னை? தலைநகரில் அக்கவுன்ட் ஓபன் செய்யும் தவெக? ஏபிபி சர்வே -
சென்னை தலைமைச் செயலகத்தை அதிரவைத்த காவலர் கோதண்டபாணி.. என்ன நடந்தது? -
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம்












Click it and Unblock the Notifications