அது என்ன மோச்சா புயல்? பெயர் வைத்தது இந்த நாடா.. புயலுக்கு பெயர் வைக்கப்படுவது எப்படி தெரியுமா?
சென்னை: வங்கக்கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு மோச்சா என்று பெயர் வைத்தது எந்த நாடு? புயல்களுக்கு எதன் அடிப்படையில் பெயர்கள் வைக்கப்படுகின்றன? விரிவாக பார்ப்போம்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலிமை அடைய உள்ளது. நாளை மறுநாள் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வங்கக்கடலில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.

இந்த புதிய புயலுக்கு மோச்சா என பெயரிடப்பட்டு இருக்கிறது. வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பல்வேறு பெயர்கள் வைக்கப்பட்டு அவை, புயல் கரையை கடக்கும் வரை ஊடகங்கள், சமூக வலைதளங்கள், பொதுமக்கள் மத்தியில் அதிகளவில் புழக்கத்தில். அப்படி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய கஜா புயல், ஓகி புயல், தானே புயல், வர்தா புயல், நிசா புயல் என பல்வேறு புயல்கள் இன்று வரை மக்கள் மனதில் இடம்பெற்று உள்ளன.
இந்த புயல்களுக்கு பல்வேறு நாடுகள் பெயரிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது வங்கக்கடலில் உருவாக இருப்பதாக கூறப்படும் புயலுக்கு "மோச்சா" என்று பெயர் வைத்தது ஏமன். அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் மோச்சா என்ற நகரம் அமைந்து இருக்கிறது. செங்கடலை ஒட்டி அமைந்து இருக்கும் இந்த நகரத்தின் பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்து அது தற்போது இந்த புயலுக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த புயல்களுக்கு உலக வானிலை அமைப்பான WMO மற்றும் ESCAP எனப்படும் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளும் பெயர்களை வைக்கின்றன. புயல்களுக்கு பெயர்களை வைப்பதற்கு என்றே சில விதிகள் உள்ளன. இதுகுறித்து உலக வானிலை அமைப்பின் இணையதளத்திலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதில், இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு எழுத்து வரிசைப்படி, ஆண் மற்றும் பெண் பெயர்கள் மாறி மாறி வைக்கப்படும். அதேபோல் வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியை ஒட்டிய நாடுகள், கடந்த 2000 வது ஆண்டு முதல் புயல்களுக்கு பெயர் வைப்பதில் புதிய வழிமுறைகளை பின்பற்ற தொடங்கின.
எழுத்து வரிசைப்படி அந்த பெயர்கள் நாடுகள் வாரியாக பட்டியலிடப்படும். அதில் இருபாலின பெயர்களும் இருக்கும். என உலக வானிலை அமைப்பு தெரிவித்து இருக்கிறது. சில புயல்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கும். அதேபோல் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்களும் ஏற்படலாம். எனவே குழப்பங்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இப்படி அதற்கு பெயர்களை வைக்கப்படுகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications