பிளஸ் 1 தேர்வு முடிவுகள் 2024 : தமிழகத்தில் தேர்ச்சி சதவீதத்தில் எந்த மாவட்டம் டாப்! எது கடைசி?
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி சதவீதத்தில் கோவை முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வை 8,11,172 பேர் தேர்வு எழுதினர். இதில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 91.71 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 4.04 லட்சம் பேரும் மாணவர்கள் 3.35 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். 1964 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகள் 85.75 சதவீத தேர்ச்சியும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.36 சதவீத தேர்ச்சியும். தனியார் பள்ளிகள் 98.09சதவீத தேர்ச்சியும் இரு பாலர் பள்ளிகள் 91.61 சதவீத தேர்ச்சியும் பெண்கள் பள்ளிகள் 94.46 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன.
கணினி அறிவியலில் 3432 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அது போல் கணிதத்தில் 779 பேரும் பொருளியலில் 741 பேரும் இயற்பியலில் 696 பேரும் வேதியியலில் 493 பேரும், தமிழில் 8 பேரும் ஆங்கிலத்தில் 13 பேரும் உயிரியலில் 171 பேரும் தாவரவியலில் 2 பேரும் கணக்கு பதிவியலில் 415 பேரும் 100-க்கு 100 பெற்றுள்ளனர்.
11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 96.02 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்று கோவை முதலிடத்தை பெற்றுள்ளது. அது போல் சதவீதம் தேர்ச்சி பெற்று வேலூர் கடைசி இடம் பிடித்துள்ளது.
கோவை 96.02%
ஈரோடு 95.56%
திருப்பூர் 95.23%
விருதுநகர்- 95.06%
அரியலூர்- 94.96%
பெரம்பலூர் 94.82%
சிவகங்கை 94.57%
திருச்சி 94.00%
கன்னியாகுமரி 93.96%
தூத்துக்குடி 93.86%
கடலூர்- 91.01%
செங்கல்பட்டு 90.85%
தருமபுரி- 90.49%
தேனி 90.08%
திண்டுக்கல் 89.97%
விழுப்புரம் 89.41%
திருவண்ணாமலை 89.41%
தஞ்சை- 89.07%
திருவண்ணாமலை 88.91%
புதுக்கோட்டை 88.02%
ராணிப்பேட்டை 87.86%
கள்ளக்குறிச்சி 86.00%
திருவள்ளூர் 85.54%
வேலூர் 81.40%
புதுவை- 97.89 %
காரைக்கால்- 96.27%
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவலகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இன்று முதல் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2 ஆம் தேதி முதல் மறுதேர்வு நடத்தப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications