தங்கமணியும் இல்ல..வேலுமணியும் இல்ல! தவெகவுக்கு தாவ போகும் அதிமுக மாஜி யார்? சஸ்பென்ஸ் வைத்த செங்க்ஸ்
சென்னை: அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருக்கும் நிலையில் மேலும் பல முன்னாள் அமைச்சர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் என சொல்லி வருகிறார். ஏற்கனவே வெளியான சில தகவல்களின்படி அந்த பட்டியலில் இருந்த அமைச்சர்கள் எடப்பாடி தரப்பில் தஞ்சம் புகுந்து விட்டனர். இந்த நிலையில் செங்கோட்டையன் குறிப்பிட்டு வரும் அந்த முன்னாள் அமைச்சர்கள் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்டார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் டிடிவி தினகரன் சசிகலா உள்ளிட்டவரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதால் என பேசியதால் அவரது அடிப்படை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் செங்கோட்டையனுடன் உடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து இருக்கிறார். பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பு, பிரச்சாரப் பயண திட்டம் ஆகியவற்றை வகுப்பதில் தடுமாறி வந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு செங்கோட்டையனின் வரவு ஒரு பெரிய பலம் என்று சொல்லப்படுகிறது.

அதிமுக அதிருப்தி
கோபிசெட்டிபாளையத்தை தாண்டி செங்கோட்டையனுக்கு செல்வாக்கு இல்லை என அதிமுகவினர் சொன்னாலும், அவரது பழுத்த அனுபவம் தமிழக வெற்றி கழகத்துக்கு நிச்சயம் கை கொடுக்கும் என்கின்றனர். அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு வரும் செங்கோட்டையன் அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களுடன் பேசி வருவதாகவும், விஜய் கோபிசெட்டிபாளையத்துக்கு பிரச்சாரத்திற்கு வரும்போது சில முன்னாள் அமைச்சர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் சேருவார் சேருவார்கள் என பேசி இருந்தார்.
செங்கோட்டையன் பேச்சு
அந்த வகையில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த சில முன்னாள் அமைச்சர்களும் டெல்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் என சொல்லப்பட்டது. ஆனால் அதிமுக பொது குழுவில் புயலைக் கிளப்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சில முன்னாள் அமைச்சர்கள் முதல் ஆளாக அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் தவெகவில் சேர்வார்கள் என செங்கோட்டையன் யாரை குறிப்பிட்டார் என்ற கேள்வி எழுந்தது.
தமிழக வெற்றிக் கழகம்
இந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் தான் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே டெல்டா பகுதியைச் சேர்ந்த ஒரத்தநாடு எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சர் கழகத்தில் இணையலாம் என சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் தேமுதிகவில் இருந்து அதிமுகவுக்கு வந்து பின்பு, ஓபிஎஸ் அணிக்குச் சென்று தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் ஒரு முன்னாள் அமைச்சர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையாமல் என சொல்லப்படுகிறது.
ஓபிஎஸ் அணி
அந்த வகையில் அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி உடன் இருக்கும் யாரும் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்லவில்லை எனவும், பல கட்சிகளில் தாவி பலருக்கு ஆதரவாளர்களாக இருந்து தற்போது எடப்பாடி பழனிச்சாமியால் ஒதுக்கப்பட்டு இருக்கும் சிலரே செங்கோட்டையுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் தான் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்ல இருப்பதாக சொல்கின்றனர் அதிமுகவினர். அதே நேரத்தில் செங்கோட்டையன், அதிமுகவில் இருக்கும் ஒரு சில முன்னாள் அமைச்சர்களுடன் பேசி வருவது என்னவோ உண்மைதான் எனவும், ஆனால் அவர்கள் அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்துக்கு வருவார்களா? என்பது தான் தெரியவில்லை எனவும் சொல்கின்றனர்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications