‛தீபாவளி’ தமிழ் சொல் இல்லையா? எந்த மொழி வார்த்தை தெரியுமா? அர்த்தம் இதுதான்.. .தெரிஞ்சுக்கோங்க
சென்னை: ஆண்டுதோறும் நாம்‛தீபாவளி' பண்டிகையை கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் இன்று தீபாவளியை கொண்டாடும் நிலையில் ‛தீபாவளி' என்ற சொல் தமிழ் சொல் அல்ல. அது வேற்று மொழி சொல் என்பது தெரியுமா? அப்படியானால் அந்த எந்த மொழியில் இருந்து வந்தது? தீபாவளி என்பதன் அர்த்தம் என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தீபாவளி.. நாம் இன்று மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். காலையிலேயே எழுந்து உடலில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளியை நாம் கொண்டாடி வருகிறோம்.

நம் நாட்டை பொறுத்தவரை தீபாவளி கொண்டாட்டத்துக்கு பல்வேறு வரலாறுகள் சொல்லப்படுகின்றன. சொல்லப்போனால் ஒவ்வொரு மாநிலத்துக்கு மாநிலம் கூட தீபாவளியின் வரலாறும், கொண்டாடப்படும் நாட்களும் வேறுபடும்.
பல ஆயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் பண்டிகையான தீபாவளிக்கு ஒவ்வொரு காரணங்கள் சொல்லப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை நரகாசுரனை வதம் செய்த நாள் தான் தீபாவளியாக கொண்டாடப்படுவதாக சொல்வது உண்டு.
அதாவது பாகவதத்தில் வரும் கதையின் அடிப்படையில் தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. திருமாலின் வராக அவதார திருமாலுக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன். பெரும் அரக்கனான இவர் தனது பெற்றோர்களால் தான் மரணம் நிகழ வேண்டும் என்ற வரம்பெற்றுள்ளார். இதனால் திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் சத்தியபாமாவாக பிறந்த பூமாதேவி நரகாசுரனை வதம் செய்து கொன்றார். நரகாசுரனை வீழ்ந்த தினத்தை தான் தீபாவளியாக கொண்டாடுவதாக சொல்லப்படுகிறது.
சரி இது இருக்கட்டும். இனி ‛தீபாவளி' என்ற சொல் எந்த மொழியில் இருந்து வந்தது?. அதேபோல் ‛தீபாவளி' என்ற சொல்லின் அர்த்தம் என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம். தீபாவளி (Diwali) என்ற சொல் தமிழில் இருந்து வந்தது இல்லை. தீபாவளி (Dipavali) என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தீபாவளி என்பதற்கு தமிழில் ‛விளக்குகளின் வரிசை' என்று பொருள்படும். அதோடு இருளை நீக்கி ஒளி தருவது, தீமை அழிந்து நன்மை பிறப்பது, அறியாமையை நீக்கி அறிவை வளர்ப்பது உள்ளிட்டவற்றையும் தீபாவளி குறிக்கிறது. நம் நாட்டில் தீபாவளி என்பது இந்து, சமண, சீக்கியர்களின் முக்கிய பண்டிகையாக உள்ளது. அதேபோல் மற்றவர்களும் கலாசார ரீதியாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications