மிரட்டும் ஹெச்எம்பிவி வைரஸ்.. எந்த மாஸ்க் சிறந்தது.. எப்படி அணிய வேண்டும்?
சென்னை: கொரோனா வைரஸின் பாதிப்பில் இருந்தே நாடு முழுவதுமாக மீளவில்லை. அதற்குள் ஹெச்எம்பிவி வைரஸ் ஆசியா முழுவதும் மருத்துவ அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் எந்தளவில் இருக்கும். அதைக் கட்டுப்படுத்த என்ன மாதிரியான மாஸ்க் அணியலாம் என்று இந்த தொகுப்பில் காணலாம்.
பொதுவாக வைரஸ்கள் 20 நேனோ மீட்டரில் தொடங்கி 600 நேனோ மீட்டரளவுக்கு வைரஸ்களின் அளவு இருக்கும். சிறிய வைரஸ் ஒரு மணலை விட 2,000 மடங்கு சிறியதாக இருக்கும். ஆய்வுகள் படி கோவிட் வைரஸின் அளவு 50 நேனோ மீட்டரில் தொடங்கி 140 நேனோ மீட்டர் வரை இருக்கும். ஹெச்எம்பிவி வைரஸ் சராசரியாக 209 நேனோ மீட்டர் அளவில் இருக்கும்.

150 நேனோ மீட்டரில் தொடங்கி 600 நேனோ மீட்டர் வரை பல்வேறு அளவுகளில் இந்த வைரஸ் இருக்கும். சார்ஸ் கொரோனா வைரஸ் இல் இருந்து தான் கோவிட் 19 உருவாகிறது. வைரஸ் தொற்றுள்ள இடத்தை தொட்டுவிட்டு முகத்தை தொடுவதால் தான் இது மனித உடலுக்குள் செல்வதாக கூறப்படுகிறது. சராசரியாக இந்த வைரஸ்கள் உலோகம், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொருள்களில் குறைந்தபட்சம் ஒன்பது நாட்கள் வரை உயிர் வாழும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அதுவே குளிர்ச்சியான சூழல்களில் அதிகபட்சம் 28 நாட்கள் வரை கூட இந்த வைரஸ் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது. கோவிட் 19 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் சுவாச பிரச்னைகளை ஏற்படுத்தியதை போல இந்த வைரசும் சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தும். அதனால் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று சுகாதார அமைப்புகள், மத்திய, மாநில அரசுகள் கூறியுள்ளன.
ஹெச்எம்பிவி புதிய வைரஸ் அல்ல. இது ஏற்கனவே உள்ள வைரஸ்தான் எனவே இதை கோவிட் 19 வைரசுடன் ஒப்பிட வேண்டாம் என்று எய்ம்ஸ் வல்லுநர் குழு கூறியுள்ளது. ஹெச்எம்பிவி ஏற்கனவே உள்ள வைரஸ் தான். இதைப் பார்த்து பயப்பட தேவையில்லை என்று கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறியுள்ளார்.
இருப்பினும் மக்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. மாஸ்கில் 3 லேயர், N95, KN95, KF94 உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. மருத்துவர்களின் பரிந்துரைப்படி N95, KN95, KF94 மாஸ்குகள் காற்றில் உள்ள வைரஸ்களை பெருமளவுக்கு வடிகட்டி கோவிட் 19 உள்ளிட்ட வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பதற்கு உகந்தது என்கிறார்கள். அதனுடன் ஒப்பிடும்போது சர்ஜிகல் மாஸ்க் சற்று குறைவாகவே வேலை செய்யுமாம்.
இருப்பினும் சர்ஜிகல் மாஸ்க்கை முறையாக அணிந்தால் வைரஸ்களில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். துணிகளால் செய்யப்பட்ட மற்றும் அடைப்புகள் கொண்ட மாஸ்க் அணிவது அந்தளவுக்கு பயனளிக்காது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மாஸ்க்கை பொறுத்தவரை உங்கள் மூக்கு, வாய் இரண்டையும் முழுவதுமாக கவர் செய்ய வேண்டும்.
அதில் எந்த இடைவெளியும் இருக்கக் கூடாது. மாஸ்க் அணிவதற்கு முன்பு கைகளை நன்கு கழுவிவிட்டு அணிய வேண்டும். மாஸ்க் அணிந்திருக்கும்போது அதை தொடுவதை தவிர்க்க வேண்டும். N95, KN95, KF94 மாஸ்க்குகளை சில நாட்கள் பயன்படுத்தலாம். சர்ஜிகல் மாஸ்க்கை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை மீண்டும் பயன்படுத்துவது மாஸ்க் அணியாமல் இருப்பதற்கு சமம் என்கிறார்கள்.
துணி மாஸ்க்காக இருந்தால் ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் நன்கு துவைத்து காய வைக்க வேண்டும். மாஸ்க்கை அதிக வெப்பமுள்ள பகுதியில் காய வைப்பது நல்லது. எனவே மருத்துவர் பரிந்துரைப்படி மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைப்புகள் அறிவித்துள்ளன.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications