Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சினேகனிடம் ரூ.10 கோடி 'டீல்' பேசியது யார்? எந்த கட்சி? 'அதிர' வைக்கும் ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று காலை முதல் டாப் தமிழக அரசியல் செய்திகளில் முதல் இடத்தில் இருப்பது நம்ம மக்கள் நீதி மய்ய சினேகனின் செய்தி தான்.

மநீம சார்பாக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார் கவிஞரும், நடிகருமான சினேகன். தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில், ஃபைனல் வரை வந்தவர் இந்த 'செங்கிப்பட்டி' கவிஞர்.

இந்நிலையில் இன்று காலை, சினேகன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முதல் முறையாக அரசியல் களத்தில் கால் பதித்திருக்கும் சினேகனுக்கு அரசியல் அறிவு ஒன்றும் அரைகுறையாக இல்லை. சினிமா தொடர்பானவர் என்றாலும், தமிழகத்தின் அரசியல் நிலவரத்தை சற்று கலவரமாகவே அறிந்து வைத்திருக்கிறார்.

 10 கோடி வரை

10 கோடி வரை

சரி.. வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டாரே.. அவருக்கு ஒரு ஃபோனைப் போடுவோம் என்று நமது ஒன் இந்தியா தமிழ் தளம் சார்பாக பேசிய போது தான், நம்மிடம் அந்த அதிர்ச்சியான தகவலை பகிர்ந்து கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு, அவரை தொடர்பு கொண்ட 'சிலர்', விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடாமல் இருந்தால் 10 கோடி வரை தருவதற்கு தயாராக உள்ளதாக அவரிடம் பேரம் பேசியதாக தெரிவித்தார். ஆனால், தான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அவர் நம்மிடம் தெரிவித்தார்.

 கள நிலவரம்

கள நிலவரம்

இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் விருகை வி.என். ரவி, தி.மு.க. சார்பில் பிரபாகர் ராஜா, மக்கள் நீதி மய்யம் சார்பில் கவிஞர் சினேகன், நாம் தமிழர் கட்சி சார்பில் த.சா. ரஜேந்திரன், தேமுதிக சார்பில் அக்கட்சியின் துணை செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

 அவர் ஜெயிக்கக் கூடாது

அவர் ஜெயிக்கக் கூடாது

இதில், திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜாவுக்கு கட்சியிலேயே ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இவர், வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு திமுகவைச் சேர்ந்த, விருகம்பாக்கத்தில் செல்வாக்குள்ள 'தனசேகர் டீம்' தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. குறிப்பாக, பிரபாகர் ராஜா வாக்கு சேகரிக்க சென்ற போது, அவரது கார் மீது சிலர் கல்வீசி தாக்கினார்கள். இதில் கார் கண்ணாடி உடைந்தது. தனசேகரன் ஆதரவாளர்களே இந்த கல்வீச்சில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட, சம்பவம் விசாரணையில் உள்ளது. இதனால், யார் ஜெயிக்கிறார்களோ இல்லையோ, திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா ஜெயிக்கக் கூடாது என்பதில் திமுகவின் மற்றொரு டீம் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆக, விருகை திமுக நிலவரம் இப்படியாக உள்ளது.

 நம்பிக்கையில் அதிமுக

நம்பிக்கையில் அதிமுக

அதேசமயம், அதிமுக சார்பில் இம்முறை மீண்டும் களம் காணும் விருகை வி.என். ரவி தான் இங்கு சிட்டிங் எம்.எல்.ஏ. கடந்த 2016 தேர்தலில், ரவிக்கும், தனசேகருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 2,333 தான். ரவி 38.51 சதவிகித வாக்குகள் பெற, தனசேகர் 37.15 வாக்கு சதவிகிதம் பெற்றார். தனசேகருக்கு விருகையில் நல்ல செல்வாக்கு இருந்தும், திமுக தலைமை விக்கிரமராஜாவின் மகனுக்கு சீட் கொடுத்ததால், அங்கு உட்கட்சி பூசல் எழ, தேர்தல் களம் மீண்டும் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறது வி.என்.ரவி தரப்பு.

 திமுக vs அதிமுக vs மநீம

திமுக vs அதிமுக vs மநீம

அதேசமயம், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கும், தேமுதிக வேட்பாளருக்கும் வெற்றி பெறும் அளவுக்கு இங்கு செல்வாக்கு என்பது கிடையாது. இவர்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், இங்கு கவனம் பெறத்தக்க வேட்பாளர் சினேகன் மட்டுமே. சினிமாவில் இருந்து வந்தவர், முக்கியமாக திமுக, அதிமுக மாற்றம் குறித்து பேசும் 'உலக நாயகன்' கமல்ஹாசன் பாசறையில் இருந்து வந்திருப்பவர் என்பதால், சினேகன் பெருமளவு வாக்குகளை பிரிப்பார் என்று திமுகவும், அதிமுகவும் உறுதியாக நம்புகின்றன. ஸோ, விருகை தொகுதியைப் பொறுத்தவரை திமுக vs அதிமுக vs மநீம என்பதே பிரதான மோதலாக உள்ளது. இந்த நிலையில் தான், நம்மிடம் சினேகன் கூறியது போன்று, அவருக்கு ரூ.10 கோடிக்கான 'ஆஃபர்' கொடுக்கப்பட்டிருக்கிறது.

 செங்கிப்பட்டி கவிஞர்

செங்கிப்பட்டி கவிஞர்

பேசிய குரல், "நீங்கள் விருகை தொகுதியில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்' என்று சாஃப்ட்டாகவே காம்ப்ரமைஸ் பேசியிருக்கிறது. 'பார்த்துக்கலாம்.. 10 கோடி வரை தர்றோம்' என்றும் அந்த குரல் தெரிவிக்க, 'செங்கிப்பட்டி கவிஞர்' அதை அப்படியே மறுத்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக கூட்டி கழித்துப் பார்த்தால், சினேகனுடன் டீல் பேசிய கட்சி எது என்பதை நம்மால் எளிதாக யூகிக்க முடிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+