DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்!
சென்னை: தமிழகத்தில் இதுவரை எந்த கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி கண்டது தெரியுமா? இதுவரை ஒரு கட்சி செய்த சாதனையை அந்த கட்சியே செய்யவில்லை. இந்த முறையாவது சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. அதிமுகவை பொருத்தமட்டில் முதல் கட்ட வேட்பாளர்களை அறிவித்தாகிவிட்டது. திமுக தொகுதி பங்கீட்டில் பிஸியாக உள்ளது. முக்கிய கட்சிகளுக்கு முடிந்தாகிவிட்டது. சிறிய கட்சிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. தேர்தல் திருவிழாவை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கிறார்கள்.

பொதுவாக தேர்தல் என்பதை பார்க்கும் போது இந்திய அரசியலில் தமிழ்நாடு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இங்கு நடக்கும் அரசியல் நிகழ்வுகளும், சட்டசபைத் தேர்தல்களும் மற்ற மாநிலங்களால் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன.
திராவிட இயக்கங்களின் எழுச்சிக்குப் பிறகு, தமிழக அரசியல் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. ஒரு கட்சி அதிக இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்ததும், சில நேரங்களில் அதே கட்சி மிகப்பெரிய சரிவைச் சந்தித்ததும் தமிழக தேர்தல் வரலாற்றின் ஒரு அங்கம். அதுபோன்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை தெரிந்து கொள்ளலாம்.
1969-ஆம் ஆண்டு அண்ணா மறைந்த பிறகு, 1971ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கருணாநிதி தலைமையில் திமுக 184 தொகுதிகளில் தனித்து அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மொத்தம் 205 இடங்களைக் கைப்பற்றி, கருணாநிதி தலைமையிலான அரசு பதவியேற்றது.
காங்கிரஸ் பிளவு மற்றும் அண்ணாவின் மறைவு ஆகியவை திமுகவின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்களாகப் பார்க்கப்பட்டன. ஆனால், அதன் பிறகு திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க முடியவில்லை.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, 1991ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. கருணாநிதி மற்றும் பரிதி இளம்வழுதி மட்டுமே வெற்றி பெற்றனர். ஆனால், அடுத்த ஐந்தாண்டுகளில் அதாவது 1996-ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், திமுக 173 தொகுதிகளில் தனித்து வென்று மீண்டும் வலுவான ஆட்சியை அமைத்தது. பலமான ஆட்சியை இரண்டு முறை அமைத்த கட்சி என்ற பெருமையை இது திமுகவுக்குப் பெற்றுத் தந்தது.
1996-இல் அதிமுக நான்கே இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அதே ஜெயலலிதா, 1991ஆம் ஆண்டு தேர்தலில் 164 தொகுதிகளில் வெற்றி பெற்று, அதுவே அவரது அதிகபட்ச வெற்றியாகப் பதிவாகியிருந்தது.
1989ஆம் ஆண்டு முதல் தமிழக அரசியல் களத்தில் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்து வந்தன. இந்தச் சூழலில், 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக, தொடர்ந்து 2016ஆம் ஆண்டிலும் ஜெயலலிதா தலைமையில் ஆட்சியைத் தக்கவைத்தது.
கடந்த 50 ஆண்டுகளில், ஒரு கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது 2016-இல் மட்டும்தான் சாத்தியமானது. பின்னர் 2021ஆம் ஆண்டு தேர்தலில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த வெற்றியை திமுகவின் அரசியல் மறுபிரவேசமாகப் பலரும் கருதினர்.
வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். பல கருத்துக் கணிப்புகளும் அப்படியே சொல்கின்றன.
இந்த நிலையில் 1971ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தனித்து வென்ற 184 தொகுதிகள் என்ற சாதனை, இன்றுவரை எந்தக் கட்சியாலும் முறியடிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது பல கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், திமுகவுக்கும்கூட ஒரு சவாலாகவே உள்ளது. ஆகவே, 2026-ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தனது வரலாற்று சாதனையை மீட்டெடுக்குமா? தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்குமா? எத்தனை தொகுதிகளை வெல்லும்? என்ற ஆர்வம் தமிழக மக்களிடையே மேலோங்கியுள்ளது. அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் பிரச்சாரத்தை முறியடித்து அரியணை ஏறுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
Election Exclusive: ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல..அம்பத்தூரில் அய்யாவுக்கு ஆப்பு! மது குடிப்போர் கையில் சிலிண்டர் -
சொன்னா கேளுங்களே முடியலை.. திருப்பூருக்கு வரும் தவெக விஜய்! கடைசி வரை இழுபறி! ஆனந்த் சொன்ன வார்த்தை! -
அழகர்சாமி நாயுடு பேரன் என்பதால் விஜய பிரபாகரனுக்கு ஆதரவு! ஜாதி அரசியலை கையிலெடுத்த மாணிக்கம் தாகூர் -
தவெகவினரை தெறித்து ஓடவிட்ட திலகபாமா! பெரம்பூரில் நடந்த சுவாரசிய சம்பவம்.. தேர்தல் சலசலப்பு! -
மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம்.. சென்னையில் 3 நாட்களுக்கு தபால் வாக்கு சேகரிப்பு -
விஜயை பார்க்க.. சாக்கடையில் 3 கிமீ நீச்சலடித்து சென்ற தவெக தொண்டர்.. கடைசியில் ஏமாந்துட்டாரே -
"அனல் பறக்கும் களம்.. ஆளை காணோம் விஜய்!" டூப் முதல் ஹாலோகிராம் வரை.. தவெகவின் 'சமாளிப்பு' அரசியல்! -
சென்னையில் களம் காணும் 419 வேட்பாளர்கள்! அதிகபட்ச எண்ணிக்கையில் விஜய்யின் பெரம்பூர்தான் டாப்! -
திருமாவுக்கு போன் போட்ட பிரேமலதா.. கடலூர் விவகாரத்தால் கொந்தளித்த விசிகவினர்.. சர்ச்சையின் பின்னணி -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்!












Click it and Unblock the Notifications