பாபா பின்னணி.. தர்பார் சபதம்.. 12 செண்டிமெண்ட்.. மார்ச் 12ஐ ரஜினிகாந்த் தேர்வு செய்ய என்ன காரணம்?
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் குறித்து இன்று அறிவிப்பு வெளியிட முக்கியமான காரணம் இருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் குறித்து இன்று அறிவிப்பு வெளியிட முக்கியமான காரணம் இருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு பின் முக்கியமான செண்டிமெண்ட் காரணம் உள்ளதாக கூறுகிறார்கள்.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். கட்சி தொடங்குவது குறித்தும், தேர்தலில் நிற்பது குறித்தும் இன்று ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இன்னும் சில மணி நேரத்தில் அவர் செய்தியாளர்களை சந்திக்கிறார். தனது அரசியல் வருகை குறித்து நடிகர் ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த்
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று அரசியல் அறிவிப்பு குறித்து வெளியிட முக்கிய காரணம் இருக்கிறது என்கிறார்கள். பல்வேறு ஜாதக ரீதியான மற்றும் செண்டிமெண்ட் ரீதியான காரணங்களால் ரஜினி இந்த தேதியை தேர்வு செய்துள்ளார் என்கிறார்கள். முதலில் 12ம் தேதி என்பது நடிகர் ரஜினியின் பிறந்த நாள் தேதி ஆகும். டிசம்பர் 12ல்தான் ரஜினிகாந்த் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாபா எப்படி
ஜாதக ரீதியாக அவருக்கு 12 ராசியான எண் ஆம். அடுத்தபடியாக, நடிகர் ரஜினிகாந்த் பாபா படத்தின் செண்டிமெண்ட் ஒன்றையும் இன்று பயன்படுத்துகிறார். அதன்படி ரஜினிகாந்த் பாபா படத்தில் இதே மார்ச் 12ம் தேதிதான் அரசியல் ஆதரவு குறித்த முடிவை எடுப்பார். அரசியலை மாற்ற வேண்டும் என்று இதே நாளில்தான் ரஜினி அந்த படத்தில் முடிவு எடுப்பார். சக்தி கொடு பாடலுக்கு முன்பாக இந்த காட்சி படத்தில் இடம்பெற்று இருக்கும்.

தர்பார் படம்
பாபா முத்திரையை சின்னமாக மாற்ற நினைக்கும் ரஜினிகாந்த் சரியாக மார்ச் 12ம் தேதியை தேர்வு செய்துள்ளார். அதேபோல் தர்பார் படத்தின் செண்டிமெண்ட் ஒன்றையும் ரஜினி பின்பற்றுகிறார். தர்பார் படத்தில் ரஜினிகாந்த் வில்லனை பழிவாங்க இதே நாளில்தான் செல்வார். அப்போது ரஜினி, ''இன்னைக்கு மார்ச் 12'' என்று வேண்டும் என்றே சொல்லிவிட்டு, சபதம் எடுப்பது போல எடுத்துவிட்டு, வில்லனை பழிவாங்க செல்வார்.

செண்டிமெண்ட்
சரியாக தற்போது மார்ச் 12ம் தேதி அரசியல் அறிவிப்பை வெளியிட ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார். ரஜினிகாந்த் பல விஷயங்களைத் திட்டமிட்டுதான் இந்த தேதியை தேர்வு செய்துள்ளார் என்கிறார்கள். பொதுவாக நடிகர் ரஜினிகாந்த் நிறைய விஷயங்களில் ஆன்மீக ரீதியாக செண்டிமெண்ட் பார்க்க கூடியவர். அதேபோல் இதிலும் இவர் செண்டிமெண்ட் பார்க்கிறார் என்றும் கூறுகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications