நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம்
சென்னை: திமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு 1 தொகுதி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அது எந்த தொகுதி என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி இடம்பெற்றிருந்த நிலையில், திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார் நெல்லை முபாரக். ஆனால், சட்டமன்ற தேர்தலில் அவரது திட்டம் வேறாக இருக்கிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைத்திருக்கிறது திமுக. கிட்டத்தட்ட அக்கட்டி கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகளும், அமைப்புகளும் இருக்கின்றனர்.
காங்கிரஸ், தேமுதிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, மமக, த.வா.க., கொமதேக, மஜக, என லிஸ்ட் நீண்டுக் கொண்டே செல்கிறது. அந்த லிஸ்டில் இந்த முறை எஸ்.டி.பி.ஐ. கட்சியும் உள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில், சட்டசபைத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போதே திமுகவுடன் எஸ்.டி.பி.ஐ. கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமமுகவுடன் கூட்டணி அமைத்தார் நெல்லை முபாரக். கடந்த 2021ல் பாளையங்கோட்டையில் போட்டியிட்ட அவர் திமுக வேட்பாளர் அப்துல் வஹாப்புக்கு கடும் போட்டியை கொடுத்தார்.
பின்னர் மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில், இந்தச் சூழலில் இப்போது திமுகவுக்கு ஆதரவு அளித்து அக்கட்சியின் கூட்டணியில் அங்கம் வகித்து வரும் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு 1 சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தங்களுக்கு வலிமையான கட்டமைப்புள்ள தொகுதிகளை கொண்ட பட்டியலை தயாரித்துள்ளது. எஸ்.டி.பி.ஐ.
அந்த வகையில், ராமநாதபுரம், அறந்தாங்கி, பாளையங்கோட்டை, நெல்லை, ஆம்பூர், உள்ளிட்ட இன்னும் நான்கைந்து தொகுதிகள் அடங்கிய லிஸ்டை திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவிடம் அளிக்க தயாராக உள்ளது எஸ்.டி.பி.ஐ. அதில் எந்த தொகுதியை திமுக ஒதுக்க கூடும் என்பது தான் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட இன்னும் நான்கைந்து நாட்களே உள்ள நிலையில், விரைவில் தொகுதிப் பங்கீட்டை முடிக்க திமுக தீவிரம் காட்டி வருகிறது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications