நாட்டிலேயே மிக குறைந்த விலையில் மது எங்கே கிடைக்கும்? தென்னிந்திய மாநிலத்தில் தான் விலை ரொம்ப அதிகம்
சென்னை: இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் மது எத்தனை ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எங்கே குறைந்த விலையில் மது விற்கப்படுகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மது குடிப்பது உடல்நலத்திற்குக் கெடு என்பதை வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்தே வருகிறார். குறைந்த அளவில் மது குடித்தாலும் சோஷியல் டிரிங்க் எனப்படும் அவ்வப்போது மது குடித்தாலும் அது ஆபத்து என்பதை அவர்களின் எச்சரிக்கை.

இருப்பினும், இந்தியாவில் மது குடிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இதற்கிடையே இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் மது எந்தெந்த விலைகளில் விற்கப்படுகிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.
எங்கே குறைவு: நம்மூரில் கிட்டகட்ட அனைத்து இளைஞர்களின் ட்ரீம் டிரிப் என்றால் அது கோவா தான். கோவாவில் சுற்றிப் பார்க்க ஏகப்பட்ட இடங்கள் இருக்கிறது என்பது மட்டும் இதற்கான காரணம் இல்லை. அங்கே மதுவும் மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கும் இளசுகள் அங்கே கூட்டமாகக் குவிய இதுவும் ஒரு காரணம். இந்தியாவிலேயே அங்கு தான் மதுபானம் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறதாம்.
மது வகைகளுக்கு அங்கே மிகக் குறைவான வரி விதிக்கப்படுவதே இதற்குக் காரணமாகும். அதேநேரம் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் தான் வரி விகிதம் அதிகமாக இருக்கிறது. இது தொடர்பான இந்திய இன்டர்நேஷனல் ஸ்பிரிட்ஸ் அண்ட் ஒயின்ஸ் அசோசியேஷன் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் தான் கோவாவில் குறைந்த விலைக்கு மது விற்பனை செய்யப்படுவது தெரிய வருகிறது.
என்ன காரணம்: கோவாவில் வெறும் 100 ரூபாய்க்கு விற்கப்படும் மது வகைகள்.. கோவாவுக்கு அடுத்தபடியாக டெல்லியில் 134 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல ஹரியானா உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதே மது வகைகள் முறையே ரூ. 147 மற்றும் 197 ரூபாய்க்கு விற்பனைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே மது வகைகள் கர்நாடகாவில் ரூ 513க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கோவாவில் மது இவ்வளவு குறைவாக இருக்கிறதே.. அங்கே வரி எல்லாம் வசூலிக்க மாட்டார்களா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். உண்மையில் கோவாவில் மதுவுக்கு 49% வரி வசூலிக்கப்படுகிறது. மற்ற மாநிலத்தில் இதைவிட அதிக வரி வசூலிக்கப்படுவதாலேயே கோவாவில் மது விலை குறைவாக இருக்கிறது.
எங்கே அதிகம்: கோவாவில் ரூ.100 ரூபாய்க்கு விற்கப்படும் மது வகைகள் மகாராஷ்டிராவில் 226 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு 71% வரி வசூலிக்கப்படுவதே காரணமாகும். அதேபோல தெலுங்கானாவில் அதே மது வகைகள் 246 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சமாக நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் தான் வரி விகிதம் அதிகமாக இருக்கிறது. அங்கே 83% வரி வசூலிக்கப்படுவதால் மது விலை ரூ.513க்கு செல்கிறது.
இது உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் மது வகைகளுக்கான வரியாகும். அதேநேரம் வெளிநாட்டு மதுக்களுக்கு 150% கூடுதல் வரியும் சேர்கிறது. இதன் காரணமாகவே நீண்ட காலமாக வரியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியனில் உள்ள மது நிறுவனங்கள் அந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள ஓப்பன் வர்த்தக ஒப்பந்தம் மூலம் மதுவுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

வரி விகிதம்: இந்தியாவில் இப்போது ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலில் உள்ளது. மது மற்றும் பெட்ரோலிய பொருட்களைத் தவிர அனைத்தும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜிஎஸ்டிக்கு பிறகு மாநில அரசால் நேரடியாக வரிகளை விதிக்க முடியாத நிலையில், மது, பெட்ரோல்- டீசல் மற்றும் சொத்து வரி உள்ளிட்ட சில விஷயங்களில் மட்டும் மாநில அரசால் வரி விதிக்க முடியும்.
பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் இருக்கும் போதிலும், மதுவை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற பேச்சே இருப்பதில்லை. மாநில அரசின் செலவுகள் அதிகரிப்பதாலும் ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் தொகை குறைவதுமே மாநில அரசுகள் மது வகைகளில் வரியை உயர்த்த கரணமாகும்.












Click it and Unblock the Notifications