மது குடிக்க தனிநபர் அதிகம் செலவிடும் மாநிலம் எது? லிஸ்ட்டில் தமிழ்நாடு உள்ளதா? வெளியான ஆய்வறிக்கை!
சென்னை: நம் நாட்டில் எந்த மாநிலத்தில், தனிநபர் மது அருந்துவதற்கு அதிகம் செலவிடப்படுகிறது என்பது குறித்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. பட்டியலில் முன்னிலையில் உள்ள மாநிலங்கள் எவையெல்லாம் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த பட்டியலில் எந்தெந்த மாநிலங்கள் உள்ளன? எந்த மாநிலத்தில் எவ்வளவு செலவு செய்யப்படுகிறது? என்ற விவரத்தை பார்க்கலாம்.
மது வீட்டிற்கு மட்டும் அல்ல.. நாட்டிற்கும் கேடு என்பது மட்டும் இன்றி உடல்நலத்திற்கும் பெரும் கேடு என்பது அனைவரும் அறிந்தததே. ஆனாலும் இந்தியாவில் நாள்தோறும் மதுவிற்பனை என்பது அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது என்பது வேதனைக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

குறைந்த அளவில் மது குடித்தாலும் சோஷியல் டிரிங்க் எனப்படும் அவ்வப்போது மது குடித்தாலும் அது உடல் நலத்திற்கு தீங்கானதுதான்.. இந்தியாவில் மது குடிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. மது விற்பனை மூலம் கணிசமான வருவாயை அரசுகள் ஈட்டுகின்றன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசே மதுவிற்பனையை ஏற்று நடத்தி வருகிறது.
அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெரும் பங்கு டாஸ்மாக் மதுவிற்பனை மூலமே கிடைக்கிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இந்தியாவில் எந்த மாநிலத்தில் தனி நபர் ஒருவர் மது குடிப்பதற்கு அதிகம் செலவு செய்கிறார் என்பது தொடர்பாக ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. தேசிய பொது நிதி மற்றும் கொள்கை என்ற அமைப்பு இந்த ஆய்வை நடத்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் எந்த மாநிலங்கள் முதன்மை இடத்தில் உள்ளன. தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பது பற்றி இங்கே பார்ப்போம்...
அதேபோல தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் 2011-12 ஆம் நிதி ஆண்டு தரவுப்படி ஆண்டுக்கு சரசாரி தனி நபர் மது நுகர்வில் ஆந்திரா முதலிடத்தில் இருக்கிறது. ஆந்திராவில் ரூ.620 செலவு செய்யப்படுகிறது. கேரளாவில் ரூ.486 மற்றும் இமாச்சல பிரதேசத்தில் 457 மற்றும் பஞ்சாபில் ரூ.453 மற்றும் தமிழ்நாடு ரூ.330 , ராஜஸ்தான் ரூ.308 என முன்னிலை வக்கின்றன. மதுவினால் அதிக வரி வருவாய் பெற்ற மாநிலமாக கோவா உள்ளது. கடைசி இடத்தில் ஜார்க்கண்ட் உள்ளது.
தெலுங்கானாவில் சராசரியாக ஆண்டிற்கு தனிநபர் ஒருவர் செலவிடும் தொகை ரூ.1,623 - ஆக உள்ளது. இரண்டாவது இடத்தில் ஆந்திர பிரதேசம் உள்ளது. இங்கு ரூ.1,306 செலவிடப்படுகிறதாம்.. 3- வது இடத்தில் சத்தீஷ்கர் உள்ளது. இந்த மாநிலத்தில் தனி நபர் ஒருவர் செலவிடும் தொகை ரூ.1,277-ஆகும். அதற்கு அடுத்த இடத்தில் பஞ்சாப் உள்ளது. இந்த மாநிலம் செலவிடும் தொகை ரூ.1,245 ஆகும். ஒடிசாவில் ரூ.1,156 செலவிடப்படுகிறது.
அதேபோல தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் 2011-12 ஆம் நிதி ஆண்டு தரவுப்படி ஆண்டுக்கு சரசாரி தனி நபர் மது நுகர்வில் ஆந்திரா முதலிடத்தில் இருக்கிறது. ஆந்திராவில் ரூ.620 செலவு செய்யப்படுகிறது. கேரளாவில் ரூ.486 மற்றும் இமாசல பிரதேசத்தில் 457 மற்றும் பஞ்சாபில் ரூ.453 மற்றும் தமிழ்நாடு ரூ.330 , ராஜஸ்தான் ரூ.308 என முன்னிலை வக்கின்றன. மதுவினால் அதிக வரி வருவாய் பெற்ற மாநிலமாக கோவா உள்ளது. கடைசி இடத்தில் ஜார்க்கண்ட் உள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications