போன தேர்தலில் 0.5 சதவீதம் வாக்கு வாங்கிய வாசன் கட்சிதான்.. பாஜகவின் "வலுவான" கூட்டணி!
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்து இருக்கும் நிலையில், முந்தைய தேர்தல்களில் அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் என்ன என்று பார்ப்போம்.
2024 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் நடத்தப்படலாம் என்றும் இதற்கான அறிவிப்பு மார்ச் மாதமே வெளியாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் இப்போதே தீவிரமாக இறங்கி இருக்கின்றன. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என பல முனை போட்டி நிலவுகிறது. இதில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் பாஜக பிரிந்து சென்றதால் யாருக்கு ஆதரவளிப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

அதிமுக, பாஜக என இரு கட்சிகளுடன் சிறு சிறு கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பாஜக கூட்டணியில் போட்டியிடுவதாக அறிவித்தார். இன்றைய தலைமுறையினருக்கு ஜிகே வாசன் என்றால் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கியவர் என்றும், அதிமுக கூட்டணியில் சில தொகுதிகளில் அவரது கட்சி போட்டியிட்டது என்பது மட்டுமே தெரியும். ஆனால், கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் பழமைவாய்ந்தது இந்த கட்சி.
எப்படி ஜிகே வாசன் காங்கிரஸில் இருந்து வெளியேறினாரோ அதே போன்று அவரது தந்தை ஜி.கே.மூப்பனாரும் கடந்த 1996 ஆம் ஆண்டு பிரிந்து சென்று உருவாக்கியதுதான் தமிழ் மாநில காங்கிரஸ். அதே ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் வெற்றிபெற்று தமிழ்நாட்டின் முன்னணி கட்சியாக நிரூபித்தது. அந்த கட்சிக்கு மட்டும் 27 சதவீத வாக்குகள் விழுந்தன. அதே ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் 9.3 சதவீதம் வாக்குகளை பெற்று 39 இடங்களில் வெற்றிபெற்றது.
அடுத்து கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை ஜிகே மூப்பனார் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். அதில் அக்கட்சியின் வாக்கு சதவீதம் 6.73 ஆக குறைந்து 23 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த ஆண்டிலேயே மூப்பனார் காலமானார். இதையடுத்து அக்கட்சியின் தலைவரானார் ஜிகே வாசன். பின்னர் காங்கிரஸில் இணைந்தார் ஜிகே வாசன். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். அதன் பின்னர் காங்கிரஸுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அக்கட்சியை விட்டு விலகி மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸை எடுத்து நடத்த தொடங்கினார்.
அந்த சமயத்தில் ஜிகே வாசன் நடத்திய மாநாடுகளுக்கு சென்ற மக்கள் கூட்டத்தை பார்த்து பெரும் தாக்கத்தை தமிழ்நாடு அரசியலில் ஏற்படுத்தப்போகிறார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் 26 தொகுதிகளில் போட்டியிட்ட தாமக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அடுத்து 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட்ட தாமக வெறும் 0.5 சதவீதம் வாக்கு மட்டுமே பெற்று தோல்வியையே தழுவியது.
அடுத்து கடந்த 2021 சட்டசபைத் தேர்தலிலும் அக்கட்சி அதிமுக கூட்டணியில் 7 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள ஜிகே வாசன் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்று பார்ப்போம்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications