வீதிக்கு வந்த திமுக காங்கிரஸ் கூட்டணி உரசல்! மாஜி மத்திய அமைச்சர் விட்ட வார்த்தை!
சென்னை: திமுகவும் காங்கிரஸ் கட்சியும் ஒரே கூட்டணியில் இருக்கும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி விட்ட வார்த்தை ஒன்று அண்ணா அறிவாலயத்தை சூடாக்கியுள்ளது.
பாஜக ஆட்சியை மத்தியில் அகற்ற வேண்டும் என்ற ஒருமித்த கருத்துடன் 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு இந்தியா கூட்டணியை கட்டமைத்துள்ளன. இந்தச் சூழலில் இந்தியா கூட்டணியில் திமுக குழப்பம் ஏற்படுத்தக் கூடாது எனப் பேசி கூட்டணியில் குண்டு வீசி அதிர வைத்திருக்கிறார் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி.

கூட்டணி தர்மத்தை திமுக தான் மீறுகிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் முன் வைத்திருப்பது திமுக தலைமையை டென்ஷன் ஆக்கியுள்ளது.நம்ம நாராயணசாமியா இப்படி பேசுவது என்கிற அளவுக்கு திமுக தலைமை ஆச்சரியமும் அடைந்துள்ளது. ஏனெனில் திமுகவோடு எப்போதும் சுமூகமாக செல்ல வேண்டும் என நினைக்கும் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களில் நாராயணசாமியும் ஒருவர்.
கருணாநிதி இருந்தவரையும் சரி, அதன் பின்னர் ஸ்டாலினிடமும் சரி இணக்கமான போக்கையே கடைபிடித்து வந்தவர். ஆனால் அப்படிப்பட்ட நபரே இன்று திமுக மீது கடும் குற்றச்சாட்டுகள் வைத்திருக்கிறார் என்றால் அது அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் உள்ள நபர்களை திமுகவில் இணைத்துக் கொள்வது எந்த வகையில் நியாயம் என்றும் இது தான் கூட்டணி தர்மத்தை காப்பதா எனவும் நாராயணசாமி ஆவேசமாக வினவியுள்ளார். இது குறித்து தாம் யாரிடமும் முறையிடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதால் தான் 3 மாநில தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தோம் என காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில் நாராயணசாமியின் இந்த கோபமும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இப்பவே இப்படியென்றால் இன்னும் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்தக் கூடும் என்ற விவகாரத்தில் மேலும் உரசல் அதிகமாகலாம் எனத் தெரிகிறது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications