கமலா ஹாரிஸ் செய்த சதி.. பைடன் காணவில்லை? எங்கே போனார்? நொடிக்கு நொடி அதிரும் வெள்ளை மாளிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகியதற்கு பின் பெரிய சதி நடந்து இருப்பதாக அமெரிக்கர்கள் பலர் போஸ்டுகளை போட தொடங்கி உள்ளனர். எக்ஸ் பக்கத்தில் தற்போது coup அதாவது அரசுக்கு எதிரான புரட்சி, சதி என்ற வார்த்தையும் கூட டிரெண்டாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி உள்ள அதிபர் ஜோ பைடன் துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அறிவிக்க முன்மொழிந்துள்ளார். விரைவில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்.

us trump world

பைடன் ராஜினாமா: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். ஜனநாயக கட்சியின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சியின் அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸை முன்மொழிந்தார். அமெரிக்க மக்களுக்கும் கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துள்ள பைடன், தனது முடிவு தொடர்பாக விரிவாக நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸை முன்மொழிந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலக முடிவு செய்த உடனேயே, அவரது உடல்நிலை காரணமாக அமெரிக்காவின் தற்போதைய அதிபர் பதவியில் இருந்தும் அவர் விலக வேண்டும் என்று பிரஷர் வைக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர், மைக் ஜான்சன் சமூக ஊடக தளமான X இல், ஜனாதிபதி பைடன் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராக இருந்தால், அவர் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கும் அவர் தகுதி இல்லாதவர்.. உடனே அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பைடன் ராஜினாமா செய்யும் பட்சத்தில் கமலா ஹாரிஸ் தேர்தல் வரை அதிபராக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

சதி: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகியதற்கு பின் பெரிய சதி நடந்து இருப்பதாக அமெரிக்கர்கள் பலர் போஸ்டுகளை போட தொடங்கி உள்ளனர். அதாவது இதற்கு பின் பல தியரிகள் வைக்கப்படுகின்றன. எக்ஸ் பக்கத்தில் தற்போது coup அதாவது அரசுக்கு எதிரான புரட்சி, சதி என்ற வார்த்தையும் கூட டிரெண்டாகி வருகிறது.

1. பைடன் போட்டியில் இருந்து விலகுவதாக எக்ஸ் தளத்தில் மட்டுமே கூறினார். அவர் நேரடியாக பேட்டியோ, பேச்சோ மேற்கொள்ளவில்லை.

2. பைடன் எங்கே போனார்? ஏன் அவர் வெளியே வரவில்லை?

3. அவருக்கு உடல்நிலை ரீதியாக எதோ பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. வெள்ளை மாளிகையில் என்ன நடக்கிறது?

4. கமலா ஹாரிஸ், பிரதிநிதி நான்சி பெலுசின் ஆகியோர் கொடுத்த பிரஷர்தான் பைடன் விலக காரணம்.

5. இவர்கள் இருவரும்.. அதோடு சேர்த்து ஜனநாயக கட்சிக்கு பணம் கொடுத்த நிதியாளர்கள் ஆகியோர் இணைந்துதான் பைடனை போட்டியில் இருந்து விலக வைத்துள்ளனர்.

6. இதை எல்லாம் குறிப்பிட்டுதான் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகியதற்கு பின் பெரிய சதி நடந்து இருப்பதாக அமெரிக்கர்கள் பலர் போஸ்டுகளை போட தொடங்கி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+