சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரிட்டையராகும் காவி! 2 பேரும் சரிப்பட்டு வர மாட்டாங்க! கட்டம் கட்டிய "டெல்லி" பாஜக! யாருங்க மாட்டுனது

Google Oneindia Tamil News

சென்னை: அடுத்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 7 மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றப்பட உள்ளனர். உடல்நிலை சரி இல்லாத ஒரு ஆளுநரையும் சேர்த்தால் மொத்தம் 8 மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றப்பட உள்ளனர்.

இந்த ஆளுநர்களை மாற்ற நல்ல தகுதியான நபர்களை டெல்லி பாஜக தேடி வருகிறதாம். பொதுவாக பாஜக நிர்வாகிகள், பாஜக சார்புடைய நிர்வாகிகள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் இப்படிப்பட்டவர்களை மட்டுமே பாஜக ஆளுநராக நியமனம் செய்யும்.

சமயங்களில் முன்னாள் நீதிபதிகளை கூட பாஜக ஆளுநராக நியமனம் செய்துள்ளது. அந்த வகையில்தான் இப்போதும் ஆளுநர்களை மாற்ற பாஜக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆர்எஸ்எஸ்ஸுக்கு இங்க வேலையில்லைன்னா.. உங்களுக்கு என்ன வேலை.. திருமாவுக்கு பாஜக பதிலடி ஆர்எஸ்எஸ்ஸுக்கு இங்க வேலையில்லைன்னா.. உங்களுக்கு என்ன வேலை.. திருமாவுக்கு பாஜக பதிலடி

எந்தெந்த மாநிலங்கள்

எந்தெந்த மாநிலங்கள்

தெலுங்கானா, பீகார், உத்தர பிரதேசம், கர்நாடகா, இமாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய 6 மாநிலங்கள். இது போக இன்னும் 2 மாநிலங்கள் ஆகியவற்றில் ஆளுநர்கள் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குஜராத்தில் தேர்தல் முடிவை பொறுத்து ஆளுநர் மாற்றப்படுவார். அதேபோல் தெலுங்கானாவில் விரைவில் தமிழிசை சௌந்தராஜன் மாற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. இன்னொரு உடல்நிலை சரியில்லாத ஆளுநரும் மாற்றப்பட உள்ளார்.

பதற்றம்

பதற்றம்

பொதுவாக ஆளுனர் பதவி என்பது அரசியலில் ரிட்டயர்மெண்ட் மாதிரி. அதாவது அரசியலில் ஒருவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்றால் போதும், அவருக்கு ஆளுநர் பதவியை கொடுத்து விடலாம். மாநில அரசியலில் தங்களுக்கு ஏற்றபடி செயல்படாத நிர்வாகிகளை இப்படி பாஜக ஆளுநராக போடுவது வழக்கம் . இதன் மூலம் அவர்களின் அதிருப்தியையும் சசம்பாதிக்காமல், அதே சமயம் அவர்களை கட்சிக்குள்ளும் வைத்து இருக்காமல் ஓரம் கட்ட முடியும். பலரை பாஜக இப்படித்தான் ஓரம்கட்டி இருக்கிறது.

 என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில்தான் இந்த 7 ஆளுநர்களுக்கான தேடலில் பாஜக இறங்கி உள்ளதாம். பாஜகவில் வடஇந்தியாவில் இருக்கும் சில வயதான தலைவர்களை ஆளுநர்களாக போடும் திட்டத்தில் இருக்கிறதாம். தெலுங்கானாவில் மட்டும் கே சந்திரசேகர் ராவுடன் மோதும் அளவிற்கு வலுவான ஒருவரை பாஜக தேடி வருகிறதாம். அதாவது தமிழ்நாட்டில் ஆர்.என் ரவி இருப்பது போல கொஞ்சம் நிர்வாக பின்புலம் கொண்ட வலுவான தலைவரை பாஜக தேடி வருகிறதாம்.

2 பேர்

2 பேர்

தமிழ்நாட்டில் அந்த வகையில் இரண்டு பேரை பாஜக டிக் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு பாஜகவில் ரிட்டயர்மெண்ட் கொடுக்க விரும்பும் இரண்டு பேரை பாஜக டிக் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக தலைவர்கள் யாரும் தமிழ்நாட்டில் ஆளுநர் ஆகும் விருப்பத்தில் இல்லையாம். ஆளுநர் ஆனால் அரசியல் பயணம் ஓவர். அதனால் அந்த பதவியே வேண்டாம் என்று நினைக்கிறார்களாம். டெல்லி மேலிடத்தின் குட் புக்கில் இல்லாத இரண்டு பேர் அது என்று கூறப்படுகிறது. அந்த 2 பேர் யார் என்பதுதான் தற்போது கட்சிக்குள் பெரிய விவாதமாக இருக்கிறதாம்.

English summary
Who are the 2 contentators for governors post from Tamil Nadu BJP? What is delhi plan?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X