திமுக கூட்டணியில் உள்ள 21 கட்சிகள் எவை எவை? இதுவரை 32 சீட் பங்கீடு ஓவர்! முழு லிஸ்ட்!
சென்னை: திமுக கூட்டணியில் தற்போதைய சூழலில் 21 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை 3 கட்சிகளுக்கு அதிகாரப்பூர்வமாக தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து, ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதுவரை மொத்தமாக 32 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 202 தொகுதிகளுக்கு இன்னும் 18 கட்சிகள் இடையே சீட் பகிர்வு நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ளது. விரைவில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, வாக்குறுதிகள், விருப்ப மனு விநியோகம் என தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன. மறுபுறம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு பேச்சுகளும் தீவிரமடைந்துள்ளன.

திமுக கூட்டணி சீட் ஷேரிங்
திமுக, கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது. காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கொமதேக, மமக, ஐயூஎம்எல், விசிக, தவாக, மக்கள் விடுதலை கட்சி, மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தைக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கு 28+1
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அறிவாலயத்தில் நேற்று இரவு கையெழுத்தானது.
தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் மட்டும் பங்கீடு நிறைவடைந்துள்ளது. சட்டசபை தொகுதி எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கும் தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 2 தொகுதிகளிலும் ஏணி சின்னத்திலும், மமக 2 தொகுதிகளில் திமுக சின்னத்திலும் போட்டியிட உள்ளன.

திமுக கூட்டணியில் இதுவரை சீட் பகிர்வு
இதுவரை திமுக கூட்டணியில் 3 கட்சிகளுக்கு சீட் பங்கீடு நிறைவடைந்து அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகியுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளதால் மற்ற கட்சிகளுக்கும் விரைவில் சீட் பங்கீடு உறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது. இதுவரை அதிகாரப்பூர்வமாக சீட் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தான கட்சிகள் பின்வருமாறு:
1. காங்கிரஸ் - 28 (கை சின்னம்)
2. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 2 (ஏணி சின்னம்)
3. மனிதநேய மக்கள் கட்சி - 2 (உதயசூரியன்)
இதுவரை மொத்தமாக 32 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 202 தொகுதிகளுக்கு இன்னும் 18 கட்சிகள் இடையே சீட் பகிர்வு நடைபெற உள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள்
1. திமுக
2. காங்கிரஸ்
3. மதிமுக
4. இந்திய கம்யூனிஸ்ட்
5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
6. விடுதலை சிறுத்தைகள்
7. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
8. தேமுதிக
9. மனிதநேய மக்கள் கட்சி
10. மக்கள் நீதி மய்யம்
11. தமிழக வாழ்வுரிமை கட்சி
12. மக்கள் விடுதலை கட்சி
13. ஆதித்தமிழர் பேரவை
14. அகில இந்திய பார்வர்டு பிளாக்
15. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
16. எஸ்டிபிஐ
17. மனிதநேய ஜனநாயகக் கட்சி
18. முக்குலத்தோர் புலிப்படை
19. கொங்கு இளைஞர் பேரவை
20. திராவிட வெற்றிக் கழகம்
21. புதிய திராவிட கழகம்
ஆகிய கட்சிகள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
-
என்கிட்டயே அழுது சீன் போடுறீயா? நான் என்ன கல்லா.. டிஆர் பாலுவை முற்றுகையிட்ட எஸ்ஆர் ராஜா ஆதரவாளர்கள் -
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி! -
4 மேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்.. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் மெகா ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications