அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: தமிழகத்தில் இருந்து அழைக்கப்பட்ட முக்கிய பிரமுகர்கள் யார் யார்?
சென்னை: ஆளுநர் ரவி, எடப்பாடி பழனிசாமி, துர்கா ஸ்டாலின், ராமதாஸ், ரஜினிகாந்த், தனுஷ், ஏசி சண்முகம், ஜக்கி வாசுதேவ், நாசர், பாக்யராஜ், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்களுக்கும், பிரபலங்களுக்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, பகல் 12.20 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளார். கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.

இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை, நாடு முழுவதும் உள்ள இரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 9 ஆயிரம் திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் ஜனவரி 22-ஆம் தேதி அரை நாள் விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு: இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், ஆன்மீக பெரியவர்கள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டிலும் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, ஆர்.எஸ்.எஸ் சென்னை மாநகர தலைவர் சந்திர சேகர் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் ஆகியோர் அயோத்தி ராமஜென்ம பூமி கும்பாபிஷேக அழைப்பிதழ், ராமர் கோவில் படம் மற்றும் அட்சதையை வழங்கி, கும்பாபிஷேக விழாவுக்கு அழைப்பு விடுத்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு ஆர்எஸ்எஸ் சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. சென்னை கோபாலபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டுக்குச் சென்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கினர்.
ரஜினிகாந்த் செல்கிறார்: அயோத்தி ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்தக்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து, கும்பாபிஷேக நிகழ்வுக்குக் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு ஆர்எஸ்எஸ் தென்னிந்திய அமைப்பாளர் செந்தில்குமார், பாஜகவின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினர்.
22-ம் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். அதற்காக வரும் 21ஆம் தேதியே நடிகர் ரஜினிகாந்த் அயோத்திக்குப் புறப்பட்டுச் செல்கிறார். ரஜினிகாந்த்துடன் அவரது மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணா ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பு: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்குமாறு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. துர்கா ஸ்டாலினை விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத இணை செயலாளர் நாகராஜன் தலைமையில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சந்தித்து அயோத்தி ராமஜென்ம பூமியில் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள சிலை பிரதிஷ்டை விழா அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தனர். ராமருக்கு பூஜை செய்த அட்சதையையும் அவரிடம் வழங்கினர்.
பிரபலங்களுக்கு நேரில் அழைப்பு: மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏசி சண்முகம், பறையர் பேரியக்க நிறுவனர் சிவகுரு பறையனார், ஈஷா சத்குரு ஜக்கி வாசுதேவ், மாதா அம்ருதானந்தமயி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் செந்தில்குமார் உள்ளிட்ட பலருக்கும் நேரில் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் நேரில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், திமுக எம்.எல்.ஏ மயிலை வேலு, தமிழக அரசின் மாநில திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நட்ராஜ், பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன், நடிகர்கள் தனுஷ், பாக்யராஜ், நாசர், நமீதா, லாரன்ஸ், சதீஷ், தாமு, ஸ்ரீமன், பிரசன்னா, ஸ்நேகா, இயக்குநர் தியாகராஜன், பேரரசு, கேஎஸ் ரவிக்குமார், கங்கை அமரன், பி.வாசு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கும், ஆன்மீக பெரியவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications