நயினார் லிஸ்ட்டயும் விட்றாம.. அண்ணாமலைக்கு உதவும் நண்பர்கள் எடப்பாடி கேங்? பற்றவைக்கும் ஓபிஎஸ் டீம்!
சென்னை : அண்ணாமலைக்கு மாதாமாதம் லட்சக்கணக்கில் உதவி செய்யும் நண்பர்கள் யார் என்பது விவாதம் ஆகியுள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், "எனக்கென்னமோ மாசம் ஏழெட்டு லட்சம் ரூபாய் உங்களுக்கு கொடுத்து உதவுற அளவுக்கு வசதியான வகையறாக்கள் இப்போதைய நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தானோன்னு தோணுது" என்று விமர்சித்துள்ளார்.
சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் பேசும்போது, நான் ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்று முதல் மாதம் சம்பளம் வாங்கியது முதலாக அனைத்து விவரங்களையும் வெளியிட்டுள்ளேன். எம்பிஏ படித்து முடித்த பிறகு, எனக்கு இருந்த ரூ.11 லட்சம் கடனை 7 ஆண்டுகள் கஷ்டப்பட்டு அடைத்தேன் என்றார்.

எல்லாமே நண்பர்கள் தான் : மேலும், "இந்த சொத்தை வைத்து எப்படி ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக உங்களால் இருக்க முடிகிறது? எப்படி பிழைப்பு நடத்த முடிகிறது என உங்களுக்கு சந்தேகங்கள் வரும். இந்த சந்தேகம் நியாயமானதுதான். என் வீட்டு வாடகை, ஊழியர்களின் சம்பளம், காருக்கு பெட்ரோல் என எல்லாவற்றையும் எனது நண்பர்கள்தான் கொடுக்கிறார்கள்" என அண்ணாமலை பேசி இருந்தார்.
அண்ணாமலை தனது செலவுகள் அனைத்தையும் தனது நண்பர்கள் பார்த்துக் கொள்கிறார்கள் எனக் சொல்லியிருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. மாதா மாதம் அண்ணாமலைக்காக செலவு செய்யும் அப்படிப்பட்ட நண்பர்கள் யார்? எதற்காக அவர்கள் அண்ணாமலைக்கு செலவு செய்ய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அடுத்தவர் சொத்தில் : இதுதொடர்பாகப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் 3.75 லட்சம். இதை யார் கொடுப்பது? ஒரு மாதம் உதவி செய்யலாம், வருடம் முழுக்க யார் உதவி செய்வார்? காருக்கு யார் டீசல், பெட்ரோல் பணம் கொடுகிறார்கள்? மூன்று உதவியாளர்களுக்கு யார் சம்பளம் கொடுக்கிறார்கள்? 4 ஆட்டை மேய்த்தால் சென்னையில் 3.75 லட்சம் வாடகைக்கு வீட்டில் இருக்க முடியுமா? தூய்மையாக இருக்கிறீர்கள் என்றால் ஏன் அடுத்தவன் சொத்தில் வாழ்கிறீர்கள்?
படையப்பா படத்தில் ரஜினிகாந்த், மாப்பிள்ளை அவர்தான், ஆனால் சட்டை என்னுடையது என்பதைப் போல பயன்படுத்துவதெல்லாம் நான் தான், ஆனால் கொடுப்பதெல்லாம் அவர்கள் என்கிறார். ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு பணம் அனைத்தும் வெளியில் இருந்து வருகிறது என்றால், பணம் எங்கே வார் ரூம்மில் இருந்து வருகிறதா? வார் ரூமில் செய்யப்படும் வசூல்தான் அவரது நண்பரா? யார் செலவு செய்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்" என்றார்.
எடப்பாடி வகையறா : இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "எனக்கென்னமோ மாசம் ஏழெட்டு லட்சம் ரூபாய் உங்களுக்கு கொடுத்து உதவுற அளவுக்கு வசதியான வகையறாக்கள் இப்போதைய நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தானோன்னு தோணுது.." என்று கிண்டலாக கூறியுள்ளார்.
மேலும், "தமிழ்நாட்டை ஆட்சி செய்த கட்சிகளின் தலைவர்கள் அனைவரது சொத்துப் பட்டியலையும் அடுத்தடுத்து வெளியிடப் போவதாக அண்ணாமலை அறிவித்திருக்கிறார். அப்படி என்றால் ஊழல் ஆட்சி நடத்தி சொத்துத் சேர்த்த மேற்படி கட்சிகளோடு தேர்தல் கூட்டணியை பாஜக எதிர்காலத்தில் வைத்துக் கொள்ளாது என எடுத்துக் கொள்ளலாமா...
இல்லை அவர்கள் பாஜகவோடு கூட்டணி சேருகிறபோது புனிதப்பட்டுவிடுவார்கள் என்பதாக நம்பணுமா? என்று பாஜகவை சீண்டியுள்ளார் மருது அழகுராஜ்.
நயினார் சொத்து பட்டியலையும் வெளியிட்றாம : அதோடு இன்னொரு பதிவையும் வெளியிட்டுள்ளார் மருது அழகுராஜ். அதில், "அதிமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் தொழில் துறை அமைச்சராக இருந்துவிட்டு இப்போது பாஜகவில் சட்டமன்ற குழு தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனோட சொத்துப் பட்டியலை ஞாபகம் இல்லாம அண்ணாமலை வெளிவிட்றப் போறாப்ல" என்று கிண்டலாக கூறியுள்ளார் மருது அழகுராஜ்.
அதிமுக ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியிருப்பது அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் தூக்கிப் போட்டுள்ள இந்த 'குண்டுகள்' எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது.
-
கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கதி அதோ கதிதான்.. புட்டுபுட்டு வைத்த அதிமுக முன்னாள் நிர்வாகி -
எப்பா தம்பிகளே! கொரோனாவுல உங்களுக்கு ஆல் பாஸ் போட்டது நான்தான்! அதிமுகவை மறக்கலாமா? இபிஎஸ் கலகல -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு!












Click it and Unblock the Notifications