தேதி குறிச்சாச்சு.. அமெரிக்காவில் முக்கிய தலைகளை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் பிளான்.. கசிந்த தகவல்!
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமெரிக்க பயணம் மேற்கொள்ள உள்ளதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வந்த நிலையில், வரும் 27 ஆம் தேதி அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு யார் யாரை எல்லாம் சந்திக்க உள்ளார் என்பது குறித்த தகவல்களும் கசிந்துள்ளன.
தமிழ்நாட்டை வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடந்த 3 ஆண்டுகளில் துபாய், அபுதாபி, லண்டன், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குச் சென்று, முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் இந்த முதலீட்டாளர்கள் ஈர்ப்பு பயண வரிசையில் அடுத்ததாக அமெரிக்கா செல்ல இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் 27 ஆம் தேதி அமெரிக்கா சென்று 15 நாட்கள் அங்கே தங்கியிருந்து முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார். இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. மத்திய வெளியுறவு அமைச்சகம் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முறைப்படி அனுமதியும் வழங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வரின் பயணத் திட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
அமெரிக்கா செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின், அங்கு கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சையை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவன உரிமையாளர் பில்கேட்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன், பள்ளிக்கல்வி தொடர்பான முக்கிய ஒப்பந்தம் போட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க அமெரிக்காவில் உள்ள சில பெரிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவதற்கு ஏற்ற வகையில பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அமெரிக்காவில் உள்ள சில முக்கிய தொழில் அதிபர்களை முதலமைச்சர் நேரில் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளார் ஸ்டாலின். மேலும், அமெரிக்கா வாழ் தமிழர்களை சந்திப்பதுடன் அவர்களையும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க வாழ் தமிழர்கள் நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்க இருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் இந்த பயணத்தில் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்வரின் செயலாளர்கள், தொழில் துறை செயலாளர் மற்றும் பல்வேறு உயரதிகாரிகள் உடன் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications