Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார்த்தி சிதம்பரம்.. ஆற்றல் அசோக்குமார் எல்லாம் ஒன்னுமே இல்ல.. பெரும் பணக்கார வேட்பாளர் இவர்தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை 102 லோக்சபா தோகுதிகளுக்கான தேர்தல் தொடங்கும் நிலையில், நாடு முழுவதும் களமிறங்கியுள்ள வேட்பாளர்களில் முதல் 10 பணக்கார வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் வெளிளயாகியுள்ளன.

கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. எனவே, நேற்றுடன் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பிரசாரங்கள் நிறைவடைந்தன. மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

Who are the richest candidates contesting Lok Sabha elections details have been released

தமிழ்நாடு (39), அருணாச்சல பிரதேசம் (2 லோக்சபா தொகுதிகள்), அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கர் (1), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகலா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) என நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பெரும் பணக்காரர் வேட்பாளர்களில் முதல் 10 வேட்பாளர்கள் யார் யார்? என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்ட தேர்தலில், அரசியல் கட்சியை சேர்ந்த 450 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இது மொத்த வேட்பாளர்கள் பட்டியலில் 28 சதவிகிதமாகும். முதற்கட்ட தேர்தலில் பாஜக சார்பில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 90 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்கள். காங்கிரஸில் இந்த சதவிகிதம் 88 ஆகவும், அதிமுகவில் 97 ஆகவும், திமுகவில் 97 சதவிகிதமாகவும் இருக்கிறது.

முதல் 10 பணக்காரர்கள் பட்டியிலில் கடைசி இடத்தில் காங்கிரஸின் கார்த்தி சிதம்பரம் இருக்கிறார். முன்னாள் மத்திய நிதியமைச்சரும், தற்போதைய ராஜ்யசபா உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இந்த முறையும் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ரூ.96 கோடி சொத்து இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.

இந்த பட்டியலில் 9வது இடத்தில் பாஜக வேட்பாளர் ஜோதி மிர்தா இருக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை அவர் காங்கிரசில்தான் இருந்தார். ஆனால், அதன் பின்னர் பாஜகவில் சேர்ந்துவிட்டார். தற்போது ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் தொகுதியில் இவர் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.102 கோடிக்கும அதிகம் என கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.

பணக்கார வேட்பாளர் லிஸ்டில் 8வது இடத்தில் இருப்பவர் வின்சென்ட் எச் பாலா. மேகாலயாவின் தலைமைப் பொறியாளராகவும், நீர்வளத்துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார். தற்போது மேகாலயாவின் ஷில்லாங் (தனி) தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.125 கோடிக்கு மேல் இருக்கும்.

7வது இடத்தில் இருப்பவர், தமிகத்தின் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கியுள்ள ஜெயபிரகாஷ்தான். இவருக்கு ரூ.135 கோடி சொத்து இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.

6வது இடத்தில் வேலூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இருக்கிறார். ஏராளமான தனியார் கல்லூரிகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் இவர், புதிய நீதி கட்சியின் நிறுவனராக இருக்கிறார். இவருக்கு ரூ.152 கோடி சொத்து இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூர் தொகுதியில் போட்டியிடும் மஜித் அலிக்கு ரூ.159 கோடிக்கும் அதிகமாக சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் இவர் 5வது இடத்தில் இருக்கிறார்.

பாஜகவை சேர்ந்த மாலா ராஜ்ய லக்ஷ்மி ஷா, பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறார். சமூக சேவராக அறியப்படும் இவர், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தெஹ்ரி கர்வால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் இவருக்கு ரூ.206 கோடிக்கும் அதிகமான சொத்து இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.

பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருப்பவர், பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ்தான். இவர் தமிழகத்தின் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.304 கோடிக்கு மேல் என்று கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.

அதிமுக சார்பில் ஈரோட்டில் போட்டியிடும் ஆற்றல் அசோக்குமார் வேட்புமனு தாக்கல் செய்தபோதே அவருடைய சொத்து மதிப்பு குறித்து பரவலாக அறியப்பட்டிருந்தார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.662 கோடிக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

பணக்கார வேட்பாளர் பட்டியிலில் முதலிடத்தில் இருப்பவர் காங்கிரஸ் வேட்பாளர் நகுல் நாத் என்பவர் தான். காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்தின் மகன் நகுலுக்கு ரூ.716 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா தொகுதியில் இவர் போட்டியிடுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+