DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!
சென்னை: 3 அமைச்சர்களுக்கு திமுகவில் இந்த முறை போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. அமைச்சர்கள் ராணிப்பேட்டை காந்தி, கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. வரும் 30 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. அதிமுக தனது முதல் இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

திமுக வேட்பாளர்கள் பட்டியல்
இந்நிலையில், இன்று திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, உடனடியாக திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின். தமிழக சட்டமன்றத் தேர்தலில் 164 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது. 70 தொகுதிகள் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
சட்டமன்றத் தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்களை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். புதுமுகங்கள் 60 பேருக்கு மேல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
திமுக வேட்பாளர்கள்
கன்னியாகுமரியில் மகேஷ், பாளையங்கோட்டையில் அப்துல் வகாப், ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன், ராதாபுரத்தில் அப்பாவு, திருவெறும்பூரில் அன்பில் மகேஷ், தூத்துக்குடியில் கீதாஜீவன் போட்டியிடுகின்றனர்.
மூத்த அமைச்சர் துரைமுருகன் மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான அமைச்சர்கள் மீண்டும் அதே தொகுதியிலேயே போட்டியிடுகின்றனர். கரூரில் போட்டியிட்டு வந்த செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதிக்கு மாறியுள்ளார்.
3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை
3 திமுக அமைச்சர்களுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் இல்லை. ராணிப்பேட்டை காந்தி, கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது.
கயல்விழி செல்வராஜ் கடந்த முறை போட்டியிட்ட தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் இந்திராணி போட்டியிடுகிறார். மனோ தங்கராஜின் பத்மநாபபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் காந்தியின் ராணிப்பேட்டை தொகுதியில் அவரது மகன் வினோத் காந்திக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சீட் வழங்கப்படவில்லை. அந்த தொகுதியில் பொன்முடியின் மகன் பொன்.கெளதமசிகாமணி போட்டியிடுகிறார்.
எந்தெந்த அமைச்சர்களுக்கு சீட்?
கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின்
காட்பாடி - துரைமுருகன்
திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி - கீதா ஜீவன்
செஞ்சி - மஸ்தான்
முதுகுளத்தூர்- ராஜ கண்ணப்பன்
மதுரை மத்தி- பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா
திருவெறும்பூர் - அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சி மேற்கு - கே.என்.நேரு
காங்கயம் - மு.பெ.சாமிநாதன்
துறைமுகம் - சேகர்பாபு
குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
திருச்சுழி - தங்கம் தென்னரசு
திருவண்ணாமலை - எ.வ.வேலு
ஆலங்குடி - சிவ.வீ. மெய்யநாதன்
குன்னம் - சிவசங்கர்
சைதாப்பேட்டை - மா.சுப்பிரமணியன்
ஆவடி - நாசர்
அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
திருவிடை மருதூர் - கோவி செழியன்
ஆத்தூர் - ஐ.பெரியசாமி
ஈரோடு மேற்கு - முத்துசாமி
ராசிபுரம் - மதிவேந்தன்
திருமயம் - எஸ்.ரகுபதி












Click it and Unblock the Notifications