ரொம்ப "ஸ்டிரிக்ட்".. அவங்க 2 பேர்ல ஒருத்தங்க தானாமே.. குறிவைக்கும் தமிழ்நாடு அரசு.. செம சஸ்பென்ஸ்!
சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் அடுத்த டிஜிபி யார் என்று பெரிய விவாதம் எழுந்துள்ள நிலையில், 2 பேரை தமிழ்நாடு அரசு குறி வைத்து இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதற்கான சில "ரூட்கள்" சரி செய்யப்பட்டுவிட்டன என்றும் தகவல்கள் வருகின்றன.
Recommended Video
தமிழ்நாடு டிஜிபியாக இருக்கும் ஜே.கே திரிபாதியின் பதவிக்காலம் இந்த மாத இறுதியோடு முடிவடைகிறது. இதையடுத்து புதிய டிஜிபியை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளது.
பணி மூப்பு, அனுபவம், பின்னணி ஆகிய மூன்று

எப்படி
இந்த நிலையில் தமிழ்நாடு டிஜிபியாக தேர்வாவதில் மூன்று பேருக்கு இடையில் கடும் போட்டி நிலவி வந்தது. அதன்படி வயது மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சைலேந்திர பாபு, கரண் சின்ஹா, சஞ்சய் அரோரா ஆகிய மூவருக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. இவர்கள் மூவரும் பணி மூப்பு கொண்டவர்கள்.

கண்டிப்பு
அதிலும் மூன்று பேர் மீதும் எந்த புகாரும் இல்லை. சட்ட ரீதியாக இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. மூன்று பேருமே ஸ்டிரிக்ட் அதிகாரிகள்.
பொதுவாக டிஜிபி பதவிக்கு எந்த குற்றச்சாட்டும் இல்லாத நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால் இவர்கள் மூன்று பேரும் முக்கிய போட்டியாளர்களாக இருந்தனர்.

ஆனால்
ஆனால் இதில் திடீரென தற்போது சஞ்சய் அரோரா சிஆர்பிஎப் சிறப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்றுதான் இதற்கான அறிவிப்பு வெளியானது. இதனால் அவருக்கு தமிழ்நாடு டிஜிபி ஆகும் வாய்ப்பு இல்லை. இதனால் சைலேந்திர பாபு, கரண் சின்ஹா இருவரில் ஒருவர் டிஜிபி ஆகும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

தமிழ்நாடு அரசு
இதில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே ஒருவரை டிக் அடித்துவிட்டது, திங்கள் கிழமை ஆலோசனைக்காக மட்டுமே காத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் முறைப்படி மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு சென்ற லிஸ்டில் 4 பேர் தேர்வு செய்யப்பட்டு திருப்பி லிஸ்ட் அனுப்பப்படும். அதில் ஒருவரைத்தான் அரசு தேர்வு செய்ய வேண்டும்.

வாய்ப்பு
இறுதியாக வரும் லிஸ்டில் சைலேந்திர பாபு, கரண் சின்ஹா கண்டிப்பாக இடம்பெறுவார்கள். இன்னும் இரண்டு பேர் யாராக இருப்பார்கள் என்ற சஸ்பென்ஸ் நிலவுகிறது. அதில் தமிழ்நாடு அரசு கடைசி கட்டத்தில் யாரை தேர்வு செய்யும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications