யார் அந்த 2 அமைச்சர்கள்? ஒன்னு ரூ.100.. இன்னொன்னு ரூ.160 கோடி.. பற்ற வைத்த அண்ணாமலை.. ஒரே குழப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 2 அமைச்சர்களின் ஊழல் பற்றி ஜூன் முதல் வாரம் புத்தகம் வெளியிட போவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை, முதல்வர் ஸ்டாலினின் நேற்றைய பேச்சு, கட்சத்தீவு விவகாரம், நீட் விவகாரம், தமிழ் மொழி உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி அண்ணாமலை பேசினார்.

இந்த சந்திப்பில் தமிழ்நாடு அமைச்சர்களின் ஊழல் பற்றி வெளியிட போவதாக அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை தனது பேட்டியில், ஜூன் முதல் வாரத்தில் தி.மு.க., அரசு செய்த மிகப்பெரிய இரண்டு ஊழல்களை ஆதாரத்துடன் வெளியிடுகிறேன்.அப்போது நான் செய்தியாளர்களை சந்திப்பேன். அரசின் ஊழல்களை புத்தகமாக வெளியிட போகிறேன். இனி ஒவ்வொரு துறை வாரியாக ஊழல் பட்டியலை வெளியிடுவோம். 2 அமைச்சர்கள் பதவி விலகும் அளவிற்கு ரூ.100 கோடியை தாண்டும் ஊழல் பற்றி வெளியிடுவோம்.

பாஜக ஊழல்

பாஜக ஊழல்

ஊழல்கள் பற்றி புத்தகமாக வெளியிட போகிறோம். அதன்பின் வரிசையாக ஒவ்வொரு அமைச்சர்கள் பற்றி சொல்வோம். நாங்க வந்துகிட்டே இருப்போம்.. நீங்கள் திராவிட மாடல் பற்றி பேச பேச உங்கள் ஊழல் பற்றி பேசுவோம். ஜூன் மாதம் முதல் வாரம் உங்களை வந்து சந்திக்கிறேன். அப்போது அனைத்து விஷயங்களை தெரிவிப்பேன் என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.

செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு

இதையடுத்து அண்ணாமலையிடம் செய்தியாளர் ஒருவர்.. யார் அந்த அமைச்சர்கள் என்று கூற முடியுமா? அது என்ன ஊழல் என்று சொல்ல முடியுமா? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை.. எல்லாம் விவரமாக ஜூன் மாதம் சொல்கிறேன். ஒரு ஊழல் 100 கோடி ரூபாய் ஒப்பந்தம், இன்னொன்று 160 கோடி ரூபாய் ஒப்பந்தம். இதற்காக அமைச்சர்கள் பதவி விலகுவார்கள். ஒரு ஒப்பந்தத்தை போட்டு உள்ளனர்.

யாரை சொல்கிறார்?

யாரை சொல்கிறார்?

ஒரு ஜிஓ போட்டுள்ளனர். இதை பற்றி வெளியிடுவேன் என்று அண்ணாமலையோ குறிப்பிட்டுள்ளார். இரண்டு அமைச்சர்கள் என்று அண்ணாமலை கூறி உள்ளது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. யார் அந்த இரண்டு அமைச்சர்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. அதுவும் இந்த அமைச்சர்கள் பற்றி புத்தகமாக வெளியிட போகிறேன் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். முக்கியமாக அண்ணாமலை தனது பேட்டியில் ஜிஓ ஒன்றை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

ஜிஓ

ஜிஓ

ஒப்பந்தம் ஒன்றை போடுவதற்காக ஜிஓ ஒன்றை மாற்றி உள்ளனர் என்று அண்ணாமலை கூறியுள்ளனர். இந்த நிலையில் அது என்ன ஜிஓ என்ற கேள்வி ஆளும் தரப்பில் எழுந்துள்ளது. அரசியல் வட்டாரத்தில் இது தொடர்பாக தீவிரமாக கேள்வி எழுந்துள்ளது. ஆனால் திமுக தரப்பிலோ, அண்ணாமலை லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்று இப்படி பேசுகிறார். அவர் வைக்கும் குற்றச்சாட்டில் உண்மை எதுவும் இல்லை, என்று திமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+