சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கண்கொத்தி பாம்பு".. லாஸ்ட் டைம் மாதிரி இல்லையாமே.. 3 பேருக்கு பெரிய வலை.. திமுகவுக்கு பாஜக செக்?

திமுகவில் 3 புள்ளிகளுக்கு குறி வைத்து தமிழக பாஜக வியூகம் வகுத்து வருகிறதாம்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவை டேமேஜ் செய்து, அதன்மூலம் தமிழகத்தில் தங்கள் செல்வாக்கை உயர்த்தி கொள்ளும் முயற்சியில் பாஜக தீவிரம் எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதிமுகவின் லோக்கல் பாலிட்டிக்ஸ், திமுகவுக்கு பிளஸ் ஆகிறதோ இல்லையோ, பாஜகவுக்கு பெருத்த அரசியல் லாபத்தை ஏற்படுத்த போகிறது என்கிறார்கள்.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு, தங்கள் பிரச்சனைகளை கையாளவே நேரம் போதாமல் இருக்கும்நிலையில், பாஜக என்ட்ரி தந்துவிட்டது.

கோவை பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு சொந்தமான கடைகளில் ஒரே நேரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு கோவை பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு சொந்தமான கடைகளில் ஒரே நேரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

 கலர் மாறுது

கலர் மாறுது

திமுக அரசுக்கு எதிரான, அதிமுக மேற்கொள்ளும் அத்தனை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவைகளை கையில் எடுத்து வருகிறது.. மற்றொரு பக்கம் திமுகவின் முக்கிய அமைச்சர்களையும் டார்கெட் செய்து வருகிறதாம்.. அந்தவகையில், 3 அமைச்சர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.. இதில் முக்கியமானவர் செந்தில் பாலாஜி.. கொஞ்சநஞ்சம் பாஜகவுக்கு இருக்கும் ஆதரவையும் கொங்குவில் காணாமல் போக செய்து கொண்டிருப்பவர் என்பதால் இவர்தான் டாப்பில் உள்ளார்.. எனவே, இவர் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு கிடுக்கிப்பிடி உட்பட பல விஷயங்கள் ஆளுநர் தரப்புக்கு ரிப்போர்ட்களாக பறந்துள்ளன.

 புத்திசாலி பிடிஆர்

புத்திசாலி பிடிஆர்

அடுத்ததாக, நிதியமைச்சர் பிடிஆர்.. ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு போன்ற நிதி சார்ந்த விஷயங்களில், சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் மத்திய அரசை, கடுமையாகவும், அதேசமயம் ஆதாரப்பூர்வமாகவும் விமர்சித்து வருகிறார் நிதியமைச்சர் பிடிஆர்.. இந்த விமர்சனங்களுக்கு, மத்திய நிதியமைச்சர் நி்ர்மலா சீதாராமனும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பதிலடி தந்தே வருகிறார்.. இதனால், பிடிஆர் மீதான கடுப்பும் எரிச்சலும் பாஜகவினருக்கு அதிகமாகிவிட்டதாகவே கருதப்படுகிறது... போதாக்குறைக்கு டாக்டர் சரவணனையும் இழுத்துக் கொண்டது, அதற்கு மேல் கடுப்பை தந்துவிட்ட நிலையில், பிடிஆர் மீதான எரிச்சல்கள் கூடிவிட்டன என்றே சொல்லலாம்.

நாமக்கல்

நாமக்கல்

இதற்கு நடுவில், எம்பி ஆ. ராசா பேச்சுக்களின் வீடியோக்களும் மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாம்.. கடந்த முறை பிரதமர் மோடி சென்னை வந்தபோது, ஆளுநர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. அப்போது, அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தை பற்றிகூட சொல்லாமல், எடுத்த எடுப்பிலேயே ஆ.ராசாவின் நாமக்கல் பேச்சைதான் பிரதமரிடம் சொன்னார்களாம்.. தனித்தமிழ்நாடு குறித்து, பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு சவால் விட்ட பேச்சு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டதாம்.

 அட்வைஸ்

அட்வைஸ்

அதற்கு பிரதமரும், "திமுக என்பது சித்தாந்த ரீதியாக பாஜகவுக்கு எதிரான கட்சி... அதனால் திமுகவை நாம் எதிர்க்கும்போது, அது, தமிழ் மொழி, கலாசாரத்திற்கு எதிரான கட்சி என்பதுபோல மக்களிடம் சென்று சேர்ந்து விடக் கூடாது.. இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.. மாநில அரசு செய்யும் தவறுகளை, ஆதாரங்களுடன் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்" என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

மேஜர்

மேஜர்

ஏற்கனவே பலமுறை 4 அமைச்சர்கள் மீதான புகார்கள் தரப்பட்டும், அதனால் பெரிய பலன் எதுவும் கிடைக்காத நிலையில், இந்த முறை ஸ்டிராங் புகார்கள், ஆதாரத்துடன் திமுக மீது தரப்பட்டுள்ளதாம்.. இப்படி திமுகவின் 3 முக்கிய புள்ளிகளை சுற்றி சுற்றி வரும் பாஜக, அவர்களை எந்தவிதத்திலாவது டேமேஜ் செய்யும் முயற்சியில் அல்லது வழக்குகளின் அடிப்படையில் மக்கள் மன்றத்தில் நீதி கேட்கவும் வியூகங்களை எடுத்துள்ளதாம்.. பிடிஆர் ஏதாவது பேசினால், அதைவைத்தே அவர் மீது வழக்குகள் தொடுப்பது பாய்ச்சுவது அல்லது பொதுவெளியில் விமர்சனத்தைக் கிளப்பி அவரது மதிப்பை குலைப்பது பாஜகவின் முக்கிய அஜெண்டாவாகவே உள்ளதாம்..

 கண்கொத்தி பாம்பு

கண்கொத்தி பாம்பு

இதில், பாஜக தன்னை கண்கொத்திப் பாம்பாக கண்காணிக்கிறார்கள் என்பதை பிடிஆர் தரப்பும் மோப்பம் பிடித்துவிட்டதாம்.. அதனால், தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து, "அனைவருமே ஜாக்கிரதையாக இருங்க.. ரெகமண்டேஷன் போன்ற தேவையில்லாத சமாச்சாரங்களை என்னிடம் கொண்டுவராதீங்க என்று கண்டிப்பான உத்தரவும் போட்டுள்ளாராம் பிடிஆர்..!

English summary
Who are those 3 Senior DMK Leaders and whats tn BJPs next strategy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X