யார் அந்த 30 பேர்? திமுக, காங்கிரஸை மட்டுமில்லை.. டிடிவி தினகரன் டீமையும் விடப்போவதில்லை விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் உள்ள நிலையில் நடிகர் விஜய் எடுக்கும் அதிரடி நடவடிக்கையால் தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதன்படி திமுக, காங்கிரஸ், டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து 30 முக்கிய தலைவர்களை கட்சியில் இணைக்க உள்ளதாகவும், அவர்களின் பெயர் விவரங்கள் பட்டியல் விஜயிடம் வழங்கப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.


நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். அதன்பிறகு கடந்த ஆண்டு இறுதியில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இந்த மாநாட்டுக்கு மாநிலம் முழுவதும் இருந்து ரசிகர்கள் பங்கேற்றனர்.

vijay tvk

இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை நடிகர் விஜய் அறிவித்தார். அதன்பிறகு தற்போது மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கும் பணியை விஜய் மேற்கொண்டு வருகிறார். சென்னை பனையூரில் உள்ள தவெகவின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் சந்தித்து ஆலோசித்து மாவட்ட செயலாளர்களை நியமித்து வருகிறார்.

தவெகவில் மொத்தம் 120 மாவட்டங்கள் உள்ளன. 3 கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள், இணை செயலாளர்கள், பொருளாளர், துணை செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று சென்னை பனையூர் கட்சி அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் முக்கியமான 2 பிரமுகர்கள் தவெகவில் இணைந்தனர்.

விசிகவில் இருந்து விலகி வந்தல் ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிர்மல் குமாருக்கு தவெகவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தவெகவில் திமுக, காங்கிரஸ், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் இணைய உள்ளனராம். அதன்படி தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்திருக்கும் மாற்று கட்சி அரசியல் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த பட்டியல் விஜய்யிடம் கொடுக்கப்படுள்ளது.

அந்த பட்டியலில், திமுக, காங்கிரஸ் கட்சிகளிலிருந்து விலகி அமைதியாக இருந்து வரும் முக்கியஸ்தர்கள், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் உள்ள பொறுப்பாளர்கள், டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அதிமுக ஓ.பி.எஸ். அணியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ள பிரபலங்கள், பேச்சாளர்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் இருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+