வெளியே நிற்கும் 2 பேர்.. கையில் சூட்கேஸ்! செந்தில் பாலாஜி விசாரணையில் நடக்கும் விசித்திரம்! யாரது?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடத்தப்படும் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடையில் இரண்டு பேர் விசாரணை அறைக்கு வெளியிலேயே நிற்க தொடங்கி உள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சார்பாக நேற்று காலை 9 மணியில் இருந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார். காலையில் தொடங்கிய விசாரணை விடாமல் நடைபெற்று வருகிறது. காலை 8.30 மணிக்கு உணவு முடித்த பின் தொடங்கிய விசாரணை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

செந்தில் பாலாஜியை 5 நாட்கள் கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில் அமலாக்கத்துறையின் முழு கட்டுப்பாட்டிற்குள் செந்தில் பாலாஜி வந்துள்ளார். ஆகஸ்ட் 12ம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் இனி அமலாக்கத்துறை என்ன வேண்டுமானாலும் விசாரிக்கலாம்.
இரண்டு பேர்: அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு இடையில் இரண்டு பேர் விசாரணை அறைக்கு வெளியிலேயே நிற்க தொடங்கி உள்ளனர். அவர்கள் இருவரில் ஒருவர் கையில் பெரிய சூட் கேஸ் ஒன்றும் உள்ளது. பலருக்கும் இவர்கள் யார் என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
அவர்கள் இஎஸ்ஐ மருத்துவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் வெளியே நிற்கிறார்கள். உள்ளே சென்றால் விசாரணையில் கேட்கப்படும் விஷயங்கள் கசியும் என்பதால் வெளியே நிற்க வைக்கப்பட்டு உள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு சமீபத்தில் பைபாஸ் சிகிச்சை நடந்தது. அது போன்ற சமயங்களில் இப்போது விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு உடலநலக்குறைபாடு, ரத்த கொதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே அவசர தேவைக்காக மருந்துகளோடு மருத்துவர்கள் வெளியே நிற்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் செந்தில் பாலாஜியை தினமும் விசாரணை முடிந்ததும் தூங்க செல்வதற்கு முன் ஒருமுறை சோதனை செய்வதையும் வழக்கமாக கொண்டு உள்ளனர்.
உறுதி அளித்த அமலாக்கத்துறை; முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு வழங்கும் முன் உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறையிடம் முக்கியமான விஷயம் ஒன்றை கேட்டது. இதற்கு அமலாக்கத்துறை சொன்ன பதில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி அமலாக்கத்துறையிடம்.. செந்தில் பாலாஜி உடல்நிலையில் கவனம் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதற்கு அவரின் உடல்நிலையை நாங்கள் கவனமாக பார்த்துக்கொள்வோம் என்று உறுதி அளித்துள்ளனர் . முன்பு உடல்நிலையை காரணம் காட்டி கஸ்டடியில் எடுக்க யோசித்த அதே அமலாக்கத்துறை இப்போது நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்ற உறுதியுடன் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்துள்ளது.
இந்த நிலையில்தான் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு இடையில் இரண்டு மருத்துவர்கள் வெளியிலேயே நிற்க தொடங்கி உள்ளனர்.
கைது நடவடிக்கை: இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாக்குமூலத்தை வைத்து சிலர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு வருவதாக அரசியல் தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அவரிடம் வாங்கப்படும் வாக்குமூலம் சிலருக்கு குறி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
முக்கியமாக செந்தில் பாலாஜி தம்பி கைது செய்யப்படும் வாய்ப்புகள் கூட உள்ளன. 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை தேடும் பணிகள் அமலாக்கத்துறை களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் அசோக்கின் இருப்பிடத்தை மத்திய உளவுத்துறை கண்டறிந்து அமலாக்கத்துறைக்கு தெரியப்படுத்தி விட்டது.
அந்த வகையில், அசோக் எங்கு பதுங்கியிருக்கிறார் என்பது அமலாக்கத்துறைக்கு தெரியும். அதனால், 27-ந்தேதி அவர் ஆஜராகாமல் தவிர்த்தால், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து விட்டு, அவரை கைது செய்யும் அதிரடி நடவடிக்கையில் குதிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது என்கிறார்கள்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications