தெலுங்கானாவில் 2 துணை முதல்வர்களா? ரேவந்த் ரெட்டியின் அமைச்சரவை லிஸ்ட்.. காட்டுத்தீயாக பரவும் தகவல்!
சென்னை: தெலுங்கானாவின் அடுத்த முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், தெலுங்கானா அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் பட்டியல் என லிஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரை பிஆர்எஸ் கட்சியே அங்கு ஆட்சியில் இருந்து வந்தது. இந்த நிலையில், 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி, சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளது. 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா சட்டசபையில் காங்கிரஸ் 64 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் தெலுங்கானா மாநிலத்தில் முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி: நேற்று இரவு தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ராஜ்பவனுக்கு சென்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற 64 எம்.எல்.ஏக்களின் கடிதத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் உரிமை கோரி கடிதம் வழங்கினர். முன்னதாக, சந்திரசேகர ராவ், நேற்று மாலை தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் வழங்கினார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் தெலுங்கானாவின் முதலமைச்சராகப் பதவியேற்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் மாநில தலைவரான ரேவந்த் ரெட்டியே முதல்வர் ஆவார் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. எனினும், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. துணை முதல்வரும் நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

முதலமைச்சர் யார்?: இந்நிலையில், இன்று காலையில், காங்கிடஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ரேவந்த் ரெட்டி, டிகே சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்களும், காங்கிரஸின் அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தின்போது, ரேவந்த் ரெட்டி முதலமைச்சராவதற்கு ஆதரவு தெரிவித்ததாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும், இந்தக் கூட்டத்தின்போது, தெலுங்கானா முதலமைச்சரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தீர்மானிப்பார் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலுங்கானாவின் முதலமைச்சராக யார் மாற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறிவிப்பார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடகா துணை முதல்வருமான டி.கே. சிவகுமார் இந்தக் கூட்டத்திற்குப் பிறகு தெரிவித்துள்ளார்.
மற்றொரு முக்கிய மீட்டிங்: முன்னதாக, டி.கே. சிவக்குமார், நல்கொண்டா எம்பி என். உத்தம் குமார் ரெட்டி, எதிர்க்கட்சித் தலைவர் பாட்டி விக்ரமார்கா மல்லு மற்றும் முனுகோட் எம்எல்ஏ கோமதிரெட்டி ராஜ்கோபால் ரெட்டி ஆகியோரை மற்றொரு ஹோட்டலில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். தெலுங்கானா முதல்வர் ரேஸில் உத்தம் ரெட்டி மற்றும் விக்ரமார்கா மல்லு ஆகியோரும் இருப்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நிலையில், லிஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. அதில் தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேவந்த் ரெட்டியின் அமைச்சரவையில் துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சராக பாட்டி விக்ரமார்கா மல்லு, மற்றொரு துணை முதல்வர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக சபீர் அலி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை பட்டியல்?: மேலும், தெலுங்கானா அமைச்சர்களாக அனுசுயா, விவேகானந்த், சுதர்சன் ரெட்டி, ஸ்ரீதர்பாபு, ஜக்கா ரெட்டி, அனுமந்தராவ், முகமது அசாருதீன், கிருஷ்ணா ராவ், உத்தம் குமார் ரெட்டி, கோமதி ரெட்டி வெங்கட ரெட்டி, கொண்ட சுரேகா, நாகேஸ்வர் ராவ், ஸ்ரீனிவாஸ் ரெட்டி, நரேந்தர் ரெட்டி, அட்டங்கி தயாகர், தாமோதர் ராஜா நரசிம்மா, வீரையா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் காங்கிரஸ் தரப்பில் உறுதி செய்யப்பட்டாத நிலையில், இதில் பல்வேறு சீனியர்கள், மற்றும் ரேவந்த் ரெட்டிக்கு ஆதரவானவர்கள் இடம்பெற்றிருப்பதால், இவர்களில் பலருக்கு கேபினட்டில் இடம் இருக்கும் என்றும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications