சென்னையை கொத்தோடு அள்ளிய திமுக.. எப்படின்னு பாருங்க.. வியக்கும் பிற கட்சிகள்
சென்னை: சென்னையில் உள்ள 200 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளில் திமுக அமோக வெற்றி பெற்றதற்கு காரணம் யார் தெரியுமா?
கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற தேர்தல் நடைபெற்றது. இதில் 21 மாநகராட்சிகளையும் திமுக வென்றது. அது போல் பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் திமுக கூட்டணியே வென்றது.
இந்த நிலையில் சென்னையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் திமுக 153 வார்டுகளிலும் அதிமுக 15 வார்டுகளிலும் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 13 வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் , விடுதலைச் சிறுத்தைகள் தலா 4 இடங்களிலும், மதிமுக இரு இடங்களிலும், அமமுக, ஐயூஎம்எல், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக ஆகியவை தலா ஒரு இடத்திலும் வென்றுள்ளது.

சுயேச்சைகள்
திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் மண்டலங்களில் சுயேச்சைகள் 5 பேர் வென்றுள்ளனர். சென்னையில் திமுக 65 முதல் 75 வாக்கு சதவீதம் வரை மாபெரும் அளவில் வென்றுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தனி வார்டுகளில் திமுகவுக்கு 35 சதவீத வாக்குகளே கிடைத்தன.

திமுகவின் வாக்கு சதவீதம்
ஆனால் இந்த தேர்தலில் அந்த வார்டுகளில் திமுகவின் வாக்கு சதவீதம் இரட்டிப்பாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 16 தனி தொகுதிகளில் (பெண்கள்) 15 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றுள்ளது. அது தனிபெரும்பான்மையுடன் வென்றுள்ளது. அந்த 15 வார்டுகளில் வென்றவர்கள் மேயராக தேர்வு செய்யப்படுவர்.

முஸ்லீம் மக்களின் பகுதிகள்
அது முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, விருகம்பாக்கம் ஆகிய வார்டுகளிலும் திமுக வென்றுள்ளது. திமுக கூட்டணி வென்ற 15 தனி வார்டுகளில் (பெண்கள்) 13 வார்டுகளில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கு சதவீதம் பெற்றுள்ளது. 59 ஆவது வார்டில் மட்டும் 72 வாக்குகளை பெற்றுள்ளது. 6 வார்டுகளில் 60 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல்
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 இல் நடந்த சட்டசபை தேர்தல்களில் அதிமுகவுக்கு சிறுபான்மையினர் போட்ட வாக்குகளை திமுக தற்போது அறுவடை செய்துள்ளது. இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்களிலும் மாறியுள்ளது. தாழ்த்தப்பட்டவர் ஒருவர் மேயர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவர் என்பதால் அவர்களுடைய வாக்குகள் பெரிய அளவில் திமுகவுக்கு கிடைத்துள்ளது.

சென்னை மாநகராட்சி
எனவே சென்னை மாநகராட்சியில் திமுகவின் வெற்றிக்கு பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லீம் மக்கள் மட்டும் உதவியுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. இது மட்டும் அல்லாமல் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்ற திமுகவின் அறிவிப்பும் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?












Click it and Unblock the Notifications