எதிர்கட்சிகள் கூட்டணிக்கு.. "இந்தியா" என்ற வார்த்தையை தேர்வு செய்தது அவரா? அரண்டு போன பாஜக!
சென்னை: எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த பெயரை தேர்வு செய்தது யார் என்பது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன.
கடந்த 7-8 வருடமாக எப்போதும் பாஜகதான் நரேட்டிவ் உருவாக்கும். அதாவது ஒரு விவாதத்தை உருவாக்கும். அதற்கு எதிர்க்கட்சிகள் பதில் மட்டுமே கொடுக்கும். பாஜக அடித்து ஆடும். எதிர்க்கட்சி பீல்டிங் செய்யும்.
ஆனால் முதல்முறை பேட்டை வாங்கி எதிர்க்கட்சிகள் அடித்து ஆட தொடங்கி உள்ளன. மாறாக பாஜக பீல்டிங் செய்ய களமிறங்கி உள்ளது. அதிலும் நேற்று எதிர்க்கட்சிகள் அடித்த பந்தை பிடிக்க முடியாமல் பாஜக கடுமையாக திணறிக்கொண்டு இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் அடித்த அந்த பந்துதான்.. இந்தியா! இந்த ஒரு பெயரை கேட்டதும் பாஜக கிட்டத்தட்ட அரண்டு போய் இருக்கிறது. நேற்று பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.
இதற்காக பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றுது. கடந்த கூட்டத்தில் 14 கட்சிகள் பீகாரில் உள்ள பாட்னாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த முறை 26 கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்டன. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்க முடிவு செய்தன. நேற்று நடந்த இரண்டாம் கட்ட கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில்தான் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நேற்று இணையம் முழுக்க இந்தியா vs மோடி, இந்தியா vs பாஜக, இந்தியா vs என்டிஏ என்றெல்லாம் டிரெண்ட் செய்யப்பட்டது. இந்தியா பிடிக்கவில்லையா பாகிஸ்தானுக்கு போ என்று முதல்முறையாக காங்கிரஸ் கட்சியினர் பாஜகவை பார்த்து சொல்லும் அளவிற்கு ஒரே நாளில் அதிரடி மாற்றங்கள் நடந்து உள்ளன.
இந்த பெயரால் பாஜக அரண்டு போய் உள்ளது. இது கிட்டத்தட்ட எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த மிக சிறப்பான பெயர் என்றுதான் கூற வேண்டும். ஆனால் இந்த பெயரை இவ்வளவு ஜீனியஸாக் யோசித்தது யார் என்ற கேள்வியும் உள்ளது. நேற்று நடந்த மீட்டிங்கில் வைகோ இந்திய மக்கள் முன்னணி என்ற பெயரை கூட்டணிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
அதை தொடர்ந்து பலரும் பல பெயர்களை பரிந்துரை செய்துள்ளனர். அப்போது மம்தா பானர்ஜி முன்மொழிந்த பெயர்தான் இந்தியா. அதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே வழிமொழிந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதே சமயம் மம்தாவிடம் இந்தியா என்ற பெயரை முன்மொழிய சொன்னதே ராகுல் - சோனியா காந்திதான் என்றும் கூறப்படுகிறது.
இவர்களுக்கு அரசியல் ஆலோசகர் ஒருவர் கொடுத்த பெயர்தான் இந்தியா மற்றும் அதற்கான விளக்கம். அதாவது I - Indian N - National D - Developmental I - Inclusive A - Alliance. மோடிக்கு எதிராக யாரை நிறுத்துவது என்ற குழப்பம் இருந்ததால் இந்தியாவை நிறுத்தலாம் என்று இந்த பெயரை அவர் முன்மொழிந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் உண்மையில் இந்த பெயருக்கு பின் உள்ள மாஸ்டர்மைன்ட் இன்னும் தெரியவில்லை. இந்த பெயரில் அலியன்ஸ் அதாவது கூட்டணி என்பதை கம்யூனிஸ்ட்கள் விரும்பவில்லை. ஆனாலும் இந்தியா என்பது பிடித்து போய் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications