இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தான் இந்தியாவில் எந்த சமுதாய மக்களிடம் அதிக தங்கம் இருக்கிறது என்பது தொடர்பான முக்கிய டேட்டா வெளியாகி உள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் விலை என்பது தொடர்ந்து உச்சம் தொட்டுள்ளது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு பவுன் ஆபரண தங்கம் என்பது ரூ.50 ஆயிரத்தை கடந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.

நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,160 குறைந்தது. அதன்படி ஒரு பவுன் தங்கம் ரூ.53,600க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.145 குறைந்து ரூ.6,700-க்கு விற்பனையானது.
இதையடுத்து இன்றும் தங்கத்தின் விலை குறையும் என பொதுமக்கள் நினைத்தனர். ஆனால் தங்கத்தின் விலை என்பது குறையவில்லை. இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.240 உயர்ந்தது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு பவுன் ரூ.53,840க்கு விற்பனையானது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.6,730-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் இந்தியாவில் அதிகளவிலான தங்கம் எந்த சமுதாய மக்களிடம் உள்ளது? என்பது தொடர்பான முக்கிய டேட்டா வெளியாகி உள்ளது. இது சமீபத்திய டேட்டா இல்லை. கடந்த 2020ம் ஆண்டுக்கான டேட்டா. அதாவது கடந்த 2020ம் ஆண்டில் இந்தியாவில் ஆய்வுகளை மேற்பார்வையிடும் ஐசிஎஸ்எஸ்ஆர் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி அமைப்பான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் தலித் ஸ்டடீஸ் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்திய மக்களிடம் உள்ள சொத்துகளை கணக்கிட்டு அதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அறிவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இந்த ஆய்வறிக்கை என்பது தேசிய சாம்பிள் சர்வே அலுவலகம் (NSSO) சார்பில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து இந்திய கடன் மற்றும் முதலீடு சர்வே மற்றும் இந்திய பொருளாதார கணக்கெடுப்பு தொடர்பான விபரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் தான் இந்தியாவில் அதிகளவிலான தங்கம் எந்த சமுதாய மக்களிடம் உள்ளது? குறைந்த அளவிலான தங்கம் எந்த சமுதாய மக்களிடம் உள்ளது என்பது பற்றிய முழுவிபரம் இடம்பெற்றுள்ளது. அதன்படி இந்தியாவில் அதிகளவிலான தங்கம் என்பது ஓபிசி இந்து மக்களிடம் தான் உள்ளது. அதேவேளையில் குறைந்த அளவிலான தங்கம் பழங்குடி மக்களிடம் இருக்கிறது.
அதாவது இந்தியாவில் உள்ள மொத்த தங்கத்தில் 39.1 சதவீதம் என்பது ஓபிசி இந்துக்களிடம் இருக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக உயர்ஜாதி இந்துக்களிடம் 31.3 சதவீத தங்கம் உள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த தங்கத்தில் நம் நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களிடம் 9.2 சதவீதம் உள்ளது. தலித் மக்களிடம் 9.9 சதவீத தங்கமும், பழங்குடியினரிடம் 3.7 சதவீதமும் உள்ளது. இவர்கள் தவிர மற்றவர்களின் 7.1 சதவீத தங்கம் உள்ளது.
இந்த டேட்டா 2020ம் ஆண்டு வெளியானதாக இருந்தாலும் கூட அதில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. ஏனென்றால் கொரோனா பரவல், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு உள்ளிட்டவற்றால் இதில் சிறிய அளவிலான மாற்றங்கள் நடந்து இருக்கலாம் எனவும், பெரிய மாற்றங்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை என நம்பப்படுகிறது.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications