டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தாரா டிடிவி தினகரன்? தனிவிமான பயணத்தின் பரபர பின்னணி
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் திடீர் டெல்லி பயணம் அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பயண நேரத்தை தவிர்த்து 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே டி.டி.வி.தினகரன் டெல்லியில் இருந்ததாக அங்குள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.
இதனிடையே தினகரன் டெல்லிக்கு விமானம் ஏறும் வரை அது குறித்த தகவல் அமமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பண்ணைவீடு
கடந்த மார்ச் மாதம் முதல் புதுச்சேரி ஆரோவில் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கி வருகிறார் டிடிவி தினகரன். குடும்ப உறவினர்கள் மற்றும் வீட்டு பணியாட்களை தவிர வேறு யாருக்கும் அங்கு அனுமதியில்லை. திமுக, அதிமுக, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கிய போது கூட டிடிவி தினகரன் மிகுந்த மவுனம் காத்து வந்தார். அவரது மவுனத்தின் பின்னணியில் சுப்பிரமணியசாமி இருப்பதாக கூட தெரிவிக்கப்பட்டது.

டெல்லி பயணம்
பதுங்கியது பாயத்தானோ என்பது போல் டெல்லிக்கு நேற்று திடீர் விசிட் அடித்து ஆளுங்கட்சியினர் பிரஷரை எகிற வைத்திருக்கிறார். சசிகலா விடுதலை தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தவே தினகரன் டெல்லிக்கு சென்றதாக வெளியே தகவல்கள் கசியவிடப்பட்டாலும் உண்மை அது இல்லையாம். அங்கு நடந்த சந்திப்பு டி.டி.வி.தினகரனின் அரசியல் எதிர்காலத்துக்கான சந்திப்பாம்.

நட்டாவுடன் சந்திப்பு?
வழக்கறிஞர்களை சந்திப்பதற்காக தனி விமானத்தில் அதுவும் இந்த கொரோனா காலத்தில் தினகரன் நிச்சயம் டெல்லி வந்திருக்க வாய்ப்பில்லை என்றும் பாஜக முக்கியத் தலைவர்கள் சிலரை ரகசியமாக சந்திக்க வந்திருக்கக்கூடும் எனவும் மூத்த டெல்லி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார். மொத்தமாக பயண நேரத்தை தவிர்த்து 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே தினகரன் டெல்லியில் இருந்திருக்கிறார்.

தகவல் இல்லை
நேற்று காலை தினகரன் சென்னை விமான நிலையம் சென்றதை அடுத்து அவரது பயண விவரம் அறிவதற்காக செய்தியாளர்கள் பலரும் அமமுக பொருளாளர் வெற்றிவேலை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர் டெல்லி செல்லும் தகவலே நீங்கள் சொல்லித்தான் தெரியும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications