அவ்வளவுதானா? அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு எத்தனை பேர் ஆதரவு.. பெரும்பான்மை யாருக்கு? -முழு கணக்கு
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமையை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி மிக தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார். எப்படியாவது பொதுக்குழுவில் இதற்காக தீர்மானத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என்று அவர் முயன்று கொண்டு இருக்கிறார்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கிவிட்டு, பொதுக்குழுவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வரும் தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி முயன்று கொண்டு இருக்கிறார். ஆனால் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இந்த தீர்மானத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் ஓ. பன்னீர்செல்வம்.
இதனால் எப்படியாவது தனித்தீர்மானம் கொண்டு வரலாமா என்று எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் ஆலோசனைகளை செய்து வருகிறார்.

முட்டுக்கட்டை
ஆனால் தனித் தீர்மானம் கொண்டு வந்தால் பொதுக்குழுவே நடக்காது. பொதுக்குழுவை ஒத்திவைக்க நேரிடும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பை ஓபிஎஸ் மிரட்டி வருகிறாராம். அடுத்த வாரம் பொதுகுழு நடக்க உள்ள நிலையில் அதற்குள் ஓபிஎஸ்சை சமாதானம் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அவரை எப்படியாவது வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று தம்பிதுரை, செங்கோட்டையன் ஆகியோர் அடுத்தடுத்து ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்கள்.

மீட்டிங்
இதில் ஓபிஎஸ் தரப்பிற்கு சில முக்கியமான ஆபர்களை எடப்பாடி தரப்பு வழங்கி இருக்கிறதாம். அதன்படி எடப்பாடிதான் பொதுச்செயலாளர். அவரை பொதுச்செயலாளர் ஆக்க சட்ட சிக்கல் இருந்தால் தலைவர் என்ற பதவியை உருவாக்கலாம். மற்ற எந்த பதவியை கேட்டாலும் ஓபிஎஸ்ஸுக்கு கொடுக்க தயார். அவர் மகன்கள் இருவருக்கும் பதவி கொடுக்க தயார், என்று ஓபிஎஸ்ஸுக்கு ஆபர் வழங்கி இருக்கிறார்கள். இது தொடர்பாகவே செங்கோட்டையன், தம்பிதுரை ஆகியோர் எடப்பாடியிடம் பேசி இருக்கிறார்கள்.

என்ன பொறுப்பு
அதன்படி உங்களுக்கு அவைத்தலைவர்.. பொருளாளர்.. அதிகாரம் குறைக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளை வழங்குகிறோம். துணை பொதுச்செயலாளர் பொறுப்பையும் வழங்குகிறோம். இந்த 4 பொறுப்பையும் கூட மொத்தமாக நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். பொதுச்செயலாளர் பொறுப்பு எடப்பாடிக்குத்தான் வழங்க வேண்டும், என்று கூறி இருக்கிறார்கள். செங்கோட்டையன், தம்பிதுரை ஆகியோர் ஓபிஎஸ்ஸிடம் இதை பற்றி பேசி உள்ளனர். ஆனால் அவர் இதை ஏற்கவில்லை.

இன்னொரு மீட்டிங்
இதனால் தனியார் ஹோட்டலில் எடப்பாடிக்கு நெருக்கமான கொங்கு மண்டல நிர்வாகிகள் இன்று ஓபிஎஸ்ஸை சந்தித்து பேச இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். இதில் ஓபிஎஸ்ஸுக்கு நிர்வாகிகள் பலம் இல்லை. உங்களுக்கு பொதுக்குழுவில் சரி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் தரப்பிலும் ஆதரவு இல்லை என்பது ஓபிஎஸ்ஸிடம் அழுத்தி சொல்ல இருக்கிறார்களாம். அதனால் இந்த ஆபரை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அவரிடம் கூற இருக்கிறார்களாம்.

ஆதரவு என்ன?
அதன்படி ஓபிஎஸ் தரப்பிற்கு 74 மாவட்ட செயலாளர்களில் 64 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளதாகவும், ஓபிஎஸ்ஸுக்கு மீதம் உள்ள 6 பேர் ஆதரவு தருவதாகவும். 4 பேர் இருவருக்கும் ஆதரவு தரவில்லை என்று கூறப்படுகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் 2300 பேரில் 60 சதவிகிதம் பேர் எடப்பாடி பக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி எம்எல்ஏக்கள் தரப்பில் 55 எம்எல்ஏக்கள் எடப்பாடி ஆதரவில் இருப்பதாகவும் 4-6 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் டீமில் இருப்பதாகவும். 5 பேர் வரை இரண்டு பேருக்கும் எதிராக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications