’நம்பர்’ நடிகை தான் எதிரியா? நரம்பு புடைக்க பேசும் தனுஷ்.. யார் தான் அந்த எதிரி! லீக்கான சீக்ரெட்!
சென்னை: குபேரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் மிகவும் உணர்ச்சி பொங்க பேசி வருகிறார் தனுஷ். ராயன் பட நிகழ்ச்சிகளில் இருந்தே யாரோ தனது வளர்ச்சியை தடுப்பது போல ஆக்ரோஷமாக பேசி வருகிறார். இந்த நிலையில் உண்மையில் தனுஷுக்கு யார் தான் தொல்லை கொடுக்கிறார்கள்? யார் தான் அந்த எதிரி? என கேட்கிறார்கள் ரசிகர்கள்.
தமிழ் திரையுலகில் வாரிசு நடிகர்களில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெற முடியும். பல முன்னணி நாயகர்களின் வாரிசுகள் திறமையின்மையால் காணாமல் போயிருக்கிறார்கள். இதற்கு உதாரணமாய் ஏராளமான நடிகர்களை சொல்லலாம்.
அதே நேரத்தில் தந்தை, அண்ணன் மூலம் சினிமாவுக்கு வந்தாலும் நிலைத்து நிற்பவர்கள் ஒரு சிலர்தான். விஜய், சூர்யா என குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் வாரிசுகளாக அறிமுகமானாலும் திறமையால் சினிமாவில் ஜெயித்தவர்கள். அப்படி திறமையால் ஜெயித்தவர் தான் நடிகர் தனுஷ்.

இயக்குனர் கஸ்தூரிராஜாவின் வாரிசு, இயக்குனர் செல்வராகவனின் தம்பி என்று அடையாளத்தோடு சினிமாவுக்கு வந்தாலும், அதற்கு பிறகு கடுமையாக போராடி முன்னணி நாயகனாக உயர்ந்தவர். தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் நடித்து வெற்றி கொடி நாட்டியிருக்கிறார் தனுஷ். நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.
தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில், திடீரென கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார் தனுஷ். இது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக நடிப்பிலும் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது இயக்கத்தில் வெளியான ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அடுத்ததாக அவரது நடிப்பில் குபேரா திரைப்படம் வெளியாக இருக்கிறது. தற்போது அந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தனுஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் தனுஷ் உடன் நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் நாகார்ஜூனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் குபேரா படத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார். தன்னிடமிருந்து ஒரு செங்கலை கூட உருவ முடியாது, ரசிகர்கள் என்னோடு இருக்கிறார்கள். 20 ஆண்டுக்கு மேலாக ரசிகர்கள் தான் எல்லாம், என்னை அழித்துவிட முடியாது.. அப்படி இப்படி என மிகவும் ஆவேசமாக பேசினார்.
அவரது வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பாராட்டுகளை விட அதிகமாக விமர்சித்து தான் வருகிறார்கள். உண்மையில் தனுஷை யாருமே எதிர்க்கவில்லை, அவராகவே கற்பனை செய்து கொண்டு பேசுகிறாரா என கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள். அப்படியே எதிரி என இருந்தாலும் யார் தான் அந்த எதிரி? அதையாவது சொல்லுங்களேன் தனுஷ் என கேள்வி எழுப்புகிறார்கள்.
உண்மையில் தனுஷை பொருத்தவரை ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார். இடையில் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட்கார்ட் விதிக்கக் கூட திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை அனுமதியின்றி நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தியதாக தனுஷ் நோட்டீஸ் அனுப்பியது பெரும் விவாதத்திற்கு உள்ளானது.
இதையடுத்து நயன்தாராவின் ரசிகர்கள் தனுஷை விமர்சித்தனர். அதே நேரத்தில் தனுஷ் சட்டப்படிதான் இந்த விவகாரத்தை எதிர்கொண்டார் என ஆதரவு எழுந்தது. தமிழ் சினிமாவில் மறைமுகமாக இயங்கும் ஒரு மாபியா தனுஷின் படங்களை வெளியிட விடாமல் தடுப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட 'நம்பர் நடிகைக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் புகார் எழுந்திருக்கிறது. உண்மையில் அந்த கும்பலை குறிப்பிட்டு தான் தனுஷ் பேசுகிறார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications