TVK Ajitha: "எனக்கு நியாயம் சொல்லுங்க"! விஜய் கார் மீது விழுந்த தவெக நிர்வாகி! யார் இந்த அஜிதா?
சென்னை: தவெக தலைவர் விஜய்யின் காரை வழிமறித்த நிர்வாகி அஜிதா என்பவர் யார் என்பதை பார்க்கலாம். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி அவருக்கு கிடைக்க வேண்டும் என கோரி விஜய் வந்த காரை அவர் வழிமறித்ததாக சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் எப்படியாவது வென்று முதல்வராகிவிட வேண்டும் என்ற கனவுடன் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சி தொடங்கி இரு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன.

2026 ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது (ஏப். 20ஆம் தேதி என நயினார் கூறியிருந்தார்.) இதனால் தவெக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கரூர் சம்பவம் அவர்களது முன்னெடுப்புக்கு முட்டுக்கட்டையானது.
எனினும் அடுத்தகட்டமாக காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, புதுவையிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, ஈரோடு பொதுக் கூட்டங்களை விஜய் நடத்தியிருந்தார். இந்த நிலையில் பிரச்சாரம், மாவட்டச் செயலாளர்கள் நியமனம் என விஜய் தீவிரம் காட்சி வருகிறார்.
தவெக சார்பில் 120 மாவட்டச் செயலாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தனர். எனினும் சில தொகுதிகளுக்கான மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அந்த பட்டியலில் தூத்துக்குடி மாவட்டமும் உள்ளது. அங்கு 6 சட்டசபை தொகுதிகளுக்கும் இதுவரை மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் மீதமுள்ள மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்படவுள்ளதாக நேற்று இரவு தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து இன்று காலை முதலே அதிருப்தி நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தில் கூடினர்.
மேலும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தவிர மற்ற 5 தொகுதிகளுக்கான மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
மேலும் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக சாமுவேல் என்பவர் நியமிக்கப்படவுள்ளார் என செய்தி வெளியானது. இந்த தகவலை தொடர்ந்து சாமுவேல் தனது ஆதரவாளர்களுடன் பனையூர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
இதனிடையேதான் அவரது நியமனத்திற்கு பெண் நிர்வாகி அஜிதா எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது அவரை கட்சி அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கட்சியில் நீண்ட காலமாக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. தொகுதியில் செல்வாக்கே இல்லாத ஒருவருக்கு பதவி வழங்கும் அநியாயம் என அதிருப்தியை அஜிதா தெரிவித்தார்.
விஜய்யின் நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஷபியுல்லா, அஜிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அஜிதா தனது போராட்டத்தை கைவிடவில்லை.
இதையடுத்துதான் விஜய்யின் கார் வருவதை அறிந்த அஜிதா, அந்த காரை வழிமறித்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு எழுந்தது. தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா எம்எஸ்சி, பிஎட் படித்துள்ளார்.
இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக நிர்வாகிகளுடன் இணைந்து நிறைய ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். அது போல் நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறார். திமுக அரசை கண்டித்து கண்டன பொதுக் கூட்டங்களையும் அவர் நடத்தி வருகிறார்.
அண்மையில் கூட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக பழங்குடியினர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அஜிதா வழங்கியிருந்தார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் கூடுகிறது. தூத்துக்குடியில் அண்மையில் மழை வெள்ளத்தின் போது கூட அதை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திருந்தார். தமிழகத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கைகள் வேண்டாம் என கண்டித்து அஜிதா தலைமையில் தூத்துக்குடியில் போராட்டமும் நடந்தது.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications