உதயநிதி உடன் நட்பு! ஒரே நேரத்தில் 3 நட்சத்திரங்களின் கால்ஷீட்! யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்? ED ரெய்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நீண்ட நாட்களாக நடந்த இந்த ரெய்டில், மதுபானங்கள் கொள்முதல் உட்பட சுமார் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் ஆதாரங்களை கைப்பற்ற அமலாக்கத்துறை தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழலில் சென்னையில் இன்று அதிகாலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டாஸ்மாக் அதிகாரிகள் வீடுகள் மட்டுமல்லாமல், அது சார்ந்த தொழில் செய்வோர், ஒப்பந்தத்தாரர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேனாம்பேட்டையில் உள்ள பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

Who is Akash Bhaskaran ED Raid in Dawn Pictures Producer house who has more Political connections with Udhayanithi Stalin

யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?

இன்று காலை 6.15 மணி முதல் 7.30 மணி வரை அவரின் அபார்ட்மெண்டில் 5 அமலாக்கத்திறை அதிகாரிகள் PY-01, DC-1951 என்ற பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்து சோதனை செய்தனர். டாஸ்மாக் முறைகேடு-க்கும், சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் என்ன தொடர்பு என்று பலரும் குழம்பி வருகின்றனர். சாதாரண உதய இயக்குநராக பணியாற்றிய ஆகாஷ் பாஸ்கரன், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்.

ஆகாஷ் பாஸ்கரன் திருமணம்

அதாவது, Dawn Pictures என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆகாஷ் பாஸ்கரன் நடத்தி வருகிறார். இவர் கவின்கேர் குழுமத்தின் நிறுவனர் சிகே ரங்கநாதனின் 3வது மகள் தாரணியை திருமணம் செய்துள்ளார். இவரின் மனைவி தாரணி தனியாக Moonbakes என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் நானும் ரவுடிதான் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஆகாஷ் பாஸ்கரன்.

உதவி இயக்குநர்

அதன்பின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், தனுஷ் இயக்கி வரும் இட்லி கடை திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படம், சிம்புவின் 49வது திரைப்படம் ஆகியவற்றை தயாரித்து வருவதோடு, இதயம் முரளி என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின்

ஒரே நேரத்தில் இத்தனை படங்களை தயாரித்து வருவது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆகாஷ் பாஸ்கரனின் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அரசியல்வாதிகளுடன் நட்பு

ஆகாஷ் பாஸ்கரனுக்கும் திமுக குடும்பத்தினருக்கும் இடையில் என்ன சம்பந்தம் என்று தேடி வந்தனர். இந்த நிலையில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையில் சினிமா ரீதியிலான தொடர்பு உள்ளதா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது. ஏனென்றால் கருணாநிதி வசனம் எழுதிய பிரபல திரைப்படமான பராசக்தி படத்தின் தலைப்பு ஆகாஷ் பாஸ்கரனுக்கு தான் அளிக்கப்பட்டது.

பராசக்தி படம்

அந்த தலைப்புக்கு ஏராளமான எதிர்ப்பு வந்த போதும், திமுக தரப்பில் பெரிய எதிர்ப்புகள் அளிக்கப்படவில்லை. அதேபோல் மொழிக் கொள்கையை வைத்து உருவாகும் படம் என்பதால், அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன் பராசக்தி படம் ரிலீஸாக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே புதிய கல்விக் கொள்கையால் தமிழ்நாட்டில் மொழி தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. இந்த சூழலில் தேர்தலுக்கு முன் பராசக்தி படம் வரும் போது, அது திமுகவுக்கு ஆதரவான படமாக இருக்கும் என்றும் சினிமா வட்டாரங்களில் சொல்லப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+