தமிழக பாஜகவில் புதிய பிரபலம்.. அஜித்துக்கு நெருக்கம்! கார் ரேசில் சாதனை -யார் இந்த அலிசா அப்துல்லா?
சென்னை: பிரபல கார், பைக் ரேசரும், சினிமா நடிகையுமான அலிசா அப்துல்லா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நிலையில் அவர் குறித்த தகவல்களை நெட்டிசன்கள் தேடத் தொடங்கி இருக்கின்றனர். யார் அவர்? விரிவாக காண்போம்.
தமிழ்நாடில் பாரதிய ஜனதா கட்சியை வளர்ப்பதற்கு பல்வேறு உத்திகளை கையில் எடுத்து வருகின்றனர். அதன் படி பல்வேறு துறைகளில் பிரபலமானவர்கள் கட்சியில் இணைக்கப்பட்டு வருகின்றனர்.
பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சினிமா சின்னத்திரை நடிகர்கள், விளையாட்டுத் துறையினர், சமூக வலைதளங்கள் பிரபலமாக இயங்கி வருபவர்கள் என பலருக்கு பாஜக தூதுவிட்டு அவர்களை கட்சியில் இணைத்து வருகிறது.

பாஜகவில் நடிகர்கள்
அந்த வகையில் தமிழகத்தில் சினிமா துறையை சேர்ந்த ராதாரவி, கவுதமி, காயத்ரி ரகுராம், எஸ்.வி.சேகர், ஆர்.கே.சுரேஷ், பொன்னம்பலம், மதுவந்தி, நமிதா என பலர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து இருக்கின்றனர். இவர்களில் ஒரு சிலரே தற்போது தீவிரமாக கட்சியில் செயல்பட்டு வருகின்றனர்.

பாஜகவில் அலிசா அப்துல்லா
இந்த நிலையில் இன்று பிரபல கார் மற்றும் பைக் பந்தைய வீராங்கனையான அலிஷா அப்துல்லா பாஜகவில் இணைந்து இருக்கிறார். சென்னையில் நடந்த விழாவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் வி.பி.துரைசாமி மற்றும் பாஜக பிரமுகர்கள் முன்னிலையில் அலிசா அப்துல்லா பாஜகவில் இணைந்தார். அவருக்கு அண்ணாமலை பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

ஏன் பாஜக?
இதுகுறித்து வீராங்கணை அலிசா அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, 'தமிழ்நாடு பாஜக குடும்பத்தில் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு அண்ணாமலையும் அமர்பிரசாத் ரெட்டியும் அளித்த மரியாதை மற்றும் அங்கீகாரம் காரணமாகவே நான் பாஜகவில் இணைந்து இருக்கிறேன். பெண்களின் முன்னேற்றத்துக்காக என்னால் இயன்றதை செய்வேன்.' என்று அவர் உறுதியளித்துள்ளார்.

அண்ணாமலை வாழ்த்து
இதுகுறித்து அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "விளையாடுத்துறையின் உண்மையான ஜாம்பவான், அற்புதமான போட்டி வீரர், செல்வி அலிசா அப்துல்லாவை பாஜகவுக்கு வரவேற்பதில் மகிழ்கிறேன். ஆண்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் விளையாட்டுத்துறையில் தடைகளை உடைத்து ஊக்கமளிக்கும் பெண்ணாக இருக்கிறார். விளையாட்டில் அவர் முத்திரை பதித்துள்ளார். விளையாடுத்துறைக்கு பிரதமர் மோடி ஆற்றி வரும் பணியை கண்டு அவர் பாஜகவில் இணைந்துள்ளார்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

யார் இந்த அலிசா அப்துல்லா?
சென்னையில் கடந்த 1989 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி பிறந்தவர் அலிசா அப்துல்லா. இவரது தந்தை ரேசர் என்பதால் சிறு வயதிலிருந்தே பைக் மற்றும் கார் ரேசில் இவரும் ஆர்வமாக இருந்தார். 9 வயதிலிருந்தே கார்ட் எனப்படும் உள்ளரங்க ரேசிங் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார். 11 வயதில் தனது முதல் வெற்றியையும் பெற்றார். 13 வயதில் தேசியளவிலான உள்ளரங்க கார்ட் பந்தையத்தில் இவர் வென்றார்.

சினிமா அறிமுகம்
ரேசிங்கில் இந்தியாவிலேயே சாம்பியன் பட்டம் வென்ற முதல் என்ற பெருமையை பெற்றார். இதேபோல் தொடர்ந்து பல்வேறு பந்தயங்களில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். அதர்வா நடித்த இரும்புக் குதிரை திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் பெண் பைக்கராக நடித்து இவர் அறிமுகம் கொடுத்தார், அதன் பின்னர் விஜய் ஆண்டனி நடத்த சைத்தான் படத்தில் இவர் நடித்திருப்பார். நடிகர் அஜித் குடும்பமும் இவரது குடும்பமும் மிகவும் நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது.
-
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!











Click it and Unblock the Notifications