அண்ணாமலையா? ஆமா யாரு அவரு? தமிழகத்தில் பாஜகவை நான் பார்த்ததே இல்லையே.. சுப்பிரமணியன் சுவாமி சாடல்
சென்னை: தமிழகத்தில் பாஜக என்ற கட்சி இருக்கிறதா? அண்ணாமலை யார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பிய நிலையில் பிரதமர் மோடியையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது சொந்த கட்சியையே அவர் அதிகமாக விமர்சித்து வருகிறார். பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். பொருளாதாரமே தெரியாதவர் நிதித்துறை அமைச்சரா என விமர்சித்திருந்தார்.

அது போல் தமிழக பாஜக எப்போது தனித்து போட்டியிடுகிறதோ அப்போதுதான் அதன் பலத்தை நிரூபிக்க முடியும். மற்றபடி கூட்டணி அமைத்து போட்டியிட்டு எத்தனை இடங்களில் வென்றாலும் அதை அக்கட்சியின் பலமாக எப்படி கருத முடியும் என விமர்சித்திருந்தார்.
அது போல் தமிழக பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்லாது என 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பொது சிவில் சட்டத்தை எதிர்க்க காங்கிரஸ் கட்சியிடம் ஒன்றுமே இல்லை.
சர்தார் பட்டேல், ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் காலம் காலமாக பொது சிவில் சட்டம் வேண்டாம் என கூறி வந்தனர். பொது சிவில் சட்டம் வந்துதான் ஆக வேண்டும். நம் நாட்டில் ஆண்களும் பெண்களும் சரிசமமாக உள்ளனர். ஒருவருக்கு 4 மனைவிகள் இருக்க முடியாது. பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு குறைந்து வருகிறது என்பது கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதில் இருந்தே தெரிகிறது.

பிரதமர் மோடி சும்மா அது பண்ண வேண்டும் இது பண்ண வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் யாரையும் விமர்சிக்கலாம். தமிழகத்தில் இரு ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ள திமுகவுக்கு முன்னேற்ற பாதையில் செல்ல விருப்பமில்லை. வெள்ளைக்காரர்கள் கொடுத்த வரலாற்றையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
கோயில்களில் உள்ள வசதிகளை அழித்து வருகிறார்கள். இதுதான் திமுகவின் தில்லுமுல்லுத்தனம். மாமன்னன் குறித்து கேட்கிறீர்களா, திமுகவுக்கு சினிமாவை தவிர வேறு ஒன்றுமே தெரியாது. வரும் தேர்தலில் திமுக கட்டாயம் தோல்வி அடையும். அண்ணாமலையின் செயல்பாடு எப்படி இருக்கு, ஆமா அண்ணாமலை யாரு, தமிழகத்தில் பாஜக இருக்கா, எனக்கு அதை பற்றி எதுவுமே தெரியாதே, தமிழகத்தில் நான் பாஜகவை பார்த்தது கூட கிடையாது என விமர்சித்திருந்தார்.
-
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன?












Click it and Unblock the Notifications