’ரோடு ஷோ’க்கு கூப்டு மோடியின் செல்வாக்கை குறைத்துவிட்டார் அண்ணாமலை.. கொளுத்திபோடும் செல்லூர் ராஜூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்க கட்சி அழிந்துபோய்டும்னு சொல்றதற்கு அண்ணாமலை என்ன ஜோதிடரா?.. பிரதமர் மோடியை ரோடு ஷோவுக்கு அழைத்து வந்து செல்வாக்கை குறைத்தவர் தான் அண்ணாமலை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு பிறகும் அதிமுகவை கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சித்ததாக சொல்லப்பட்டது. எனினும், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அதிமுக தலைமை உறுதியாக கூறியது.

Who is Annamalai to talk about AIADMK Former Minister Sellur Raju Question

அண்ணாமலை அதிமுக மோதல்: இதையடுத்து, பாஜக தலைமையிலான கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்தனர். தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போகும் என அண்ணாமலை நேற்று பேசிய நிலையில் அதற்கு எடப்பாடி பழனிசாமி காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனிடையே, இன்று தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை, லோக்சபா தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என்று பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுகவினரும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

கலாய்த்த செல்லூர் ராஜூ: அந்த வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனக்கே உரிய பாணியில் அண்ணாமலையை விமர்சித்துள்ளார். அண்ணாமலை ஒரு சுஜுபி.. அவர் என்ன விசுவாமித்திரரா அவர் சொன்னதும் அதிமுக அழிந்து போக.. என்று விமர்சித்து பேசியுள்ளார். செல்லூர் ராஜூ கூறியதாவது:-

ஏங்க அண்ணாமலை பேசுறத எல்லாம் ஒரு இதா எடுத்துக்கிட கூடாதுங்க.. அண்ணாமலைக்கு நான் ஏற்கனவே பல பதிலடி கொடுத்துவிட்டேன். அண்ணாமலை என்ன ஜோதிடரா?.. நான் கேட்கிறேன்.. அவர் என்ன விசுவாமித்திரரா?.. எங்க கட்சி அழிந்துபோய்டும் னு சொல்றதற்கு.. விசுவாமித்திரருக்கு தான் அந்த சக்தி இருக்கிறது. அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது.

காமெடியாக மாறிவிட்டார்: அதிமுக எத்தனையோ பேரை பார்த்த கட்சி. இது ஒரு பீனிக்ஸ் பறவை போல அதிமுக பல சோதனைகளை கடந்து வந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த இயக்கம் பெரிய இயக்கமாக உள்ளது. இந்தியாவிலேயே 3வது பெரிய இயக்கம் அதிமுக தான். தமிழகத்தில் தனித்துவமான கட்சியாக உள்ளது.

அண்ணாமலை இப்படி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.. நகைச்சுவையாக இருக்கிறது.. அண்ணாமலை இப்போது நகைச்சுவையாக மாறிவிட்டார். அவருக்கு இப்போது தோல்வி பயம் வந்துவிட்டது. எனவே தோல்வி பயத்தை மறைப்பதற்காக இதுமாதிரி பேசி வருகிறார். சரி.. அப்படி பேசினாலும் பேசிட்டு போவட்டு.. தேர்தலுக்கு இன்னும் எத்தனை நாளுங்க இருக்கு.. இன்னும் ஒரு வாரம் இருக்கு.

மோடி செல்வாக்கை குறைத்தவர்: ஜூன் 4ஆம் தேதிக்கு அப்புறம் தெரியும் அண்ணாமலை எங்கே இருக்கிறார் என்று... முன்னாடி அண்ணாமலை அரசியலுக்கு வரும்போது கமலை சந்தித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பார்த்தார்.. அண்ணாமலை என்று பெயர் இருக்கிறதால, ஆண்டவன் சொல்றான்.. அண்ணாமலை முடிக்கிறார் என்று சொல்வதற்கு அவர் சூப்பர் ஸ்டாரும் இல்ல நடிகரும் இல்ல.. இவர் சும்மா சுஜுபி.. தான்..

அவர் பேச்சுக்கெல்லாம் இடம் கொடுக்க வேண்டியது இல்லை. அவரை போட்டு கிழி கிழின்னு கிழிச்சுட்டேன்.. இனியும் அவர் பேசுகிறார் என்றால் என்னன்னு தெரியல.. பிரதமர் மோடியை ரோடு ஷோவுக்கு அழைத்து செல்வாக்கை குறைத்தவர் தான் அண்ணாமலை. இவ்வாறு செல்லூர் ராஜூ பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+