ரஜினிக்காக காத்திருந்து! விஜய்க்காக IRS பதவியை ராஜினாமா செய்து அமைச்சரான அருண்ராஜ்! யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சராக அருண்ராஜ் பதவியேற்ற நிலையில் அவர் யார் என்பதை பார்க்கலாம். விஜய்க்காக ஐஆர்எஸ் பணியை தூக்கி எறிந்து விட்டு தற்போது விஜய்க்கு ஒரு தளபதியாக இருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு இன்று பொறுப்பேற்கிறது. முதல்வராக விஜய் பொறுப்பேற்கிறார். அவருடன் அமைச்சர்களாக இன்றைய தினம் விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றார்கள்.

arunraj tvk

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், பி வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றார்கள்.

அமைச்சர்களாக பதவியேற்க போகும் 9 பேருக்கான பட்டியலை ராஜ்பவன் வெளியிட்டுள்ளது. அதில் அருண்ராஜின் பெயரும் இருக்கிறது. ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் அருண் ராஜ் நடித்திருந்தார். அவர் யார் என்பதை பார்க்கலாம்.

அருண்ராஜ், சேலத்தை சேர்ந்த மருத்துவர் ஆவார். கடந்த 2009-ஆம் ஆண்டு ஐ.ஆர்.எஸ். பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வருமான வரி துறை அதிகாரியாக சென்னையில் பணியை தொடங்கினார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சேகர் ரெட்டி நண்பர் வீட்டில் ரெய்டு நடத்தி ரூபாய் 70 கோடி பணம் கைப்பற்றிய அதிகாரிகள் குழுவில் இருந்தவர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டசபை தேர்தலின்போது பீகார் மாநிலத்துக்கு மாற்றப்பட்ட அருண்ராஜ், அங்கு பாட்னாவில் வருமான வரித்துறை கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வந்தார். மே மாதம் தனது அரசு பணியை ராஜினாமா செய்தார். மத்திய அரசுப் பணி அதிகாரி என்பதால் இவரது விருப்ப ஓய்வுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்த போது கூட அவருடன் இவர் நெருக்கம் காட்டினாராம். ஆனால் அவர் கட்சி தொடங்கவில்லை என அறிவித்ததும் அருண்ராஜ் ஏமாற்றமடைந்தார் என சொல்லப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு நடிகர் விஜய், மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. அப்போது கூட விஜய் நெய்வேலி படப்பிடிப்பு இருந்தார். அங்கு ரெய்டுக்கு போனவர் அருண்ராஜ்தான். அந்த சமயத்தில் விஜய்க்கு எதிரான பிரச்சனைகளை அருண்ராஜ்தான் சரி செய்து கொடுத்தாராம். அது முதல் விஜய்யுடன் நல்ல நட்பில் இருந்து வருகிறாராம். விஜய் கட்சி தொடங்கிய காலம் முதலே அவருடன் அருண் நெருக்கம் காட்டி வருகிறாராம். கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய அவர்தான் உதவினாராம்.

இதனையடுத்து தமிழ்நாடு திரும்பிய அருண்ராஜ், தீவிர அரசியலில் களமிறங்கினார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அருண்ராஜ், அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அருண்ராஜ், விஜய்யின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக இருந்து வருகிறார். நீண்ட காலமாகவே விஜய்க்கு ஆலோசனைகளை வழங்கி வரும் அருண் ராஜ், 2026 சட்டசபைத் தேர்தலில் நாமக்கலில் போட்டியிட்டு வென்றார். அதில் 79,500 வாக்குகளை பெற்றார். இவரது வாக்கு சதவீதம் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் சேகர் 51,328 வாக்குகளையும் திமுக சார்பில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் ஈஸ்வரன் 49,465 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

விஜய்யின் நம்பிக்கைக்குரிய நிர்வாகிகளில் ஒருவராக இருப்பதால் கட்சியின் ஊடக உறவுகள், பிரச்சாரங்கள், கொள்கை விளக்கங்கள் ஆகியவற்றில் மிக முக்கிய பங்காற்றி வருகிறார். அருண்ராஜ் நேர்மையான அதிகாரியாக இருந்தவர், அவர் திறமைசாலி என்பது விஜய் மனதில் நன்கு பதிந்துள்ளதாம். மருத்துவரான அவருக்கு சுகாதாரத் துறை ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+