Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பொங்கிய" காளியம்மாள்.. "உருட்டாதீங்க, கூட்டுகளவாணிகள்.. திமுகவுக்கு சம்பந்தமில்லயா? நாங்க முட்டாளா"

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒன்றிய அரசை தமிழ்நாட்டு திமுக அரசை விட. நாம் தமிழர் கட்சியே கடுமையாக எதிர்க்கிறது என்றும், நாம் தமிழர் கட்சியை இனிமேல், "பிஜேபி பி டீம்" என்று சொல்லிக் கொண்டு இனிமேல் உருட்டாதிங்க.." என்றும் காளியம்மாள் சீறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்கு நேற்று திடீரென முடக்கப்பட்டது.

Who is BJPs B-Team and Seemans Kaliyammal criticism of DMK, bjp governments

ஆனால், அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்படவில்லை... இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

முதல்வர் கண்டனம்: இதனிடையே, சீமான், திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்கை உடனே அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ட்வீட் ஒன்றையும் ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அதில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்குதான் நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் கொந்தளித்துள்ளார்.. ஒருபக்கம் திமுக மீதும், மறுபக்கம் பாஜக மீதும் பாய்ந்துள்ளார்.. 2 ட்வீட்களையும் அடுத்தடுத்து பதிவு செய்துள்ளார்.

ட்வீட்கள்: அந்த ட்வீட்களில், அண்ணன் சீமான் மற்றும் நாம் தமிழர் நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்கை முடக்கியது ஒன்றிய அரசு தானாம். திமுகவிற்கு சம்பந்தம் இல்லையாம்... தமிழ்நாட்டில் முதன்மையாக இயங்கிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கணக்குகளை தமிழ்நாட்டு திமுக கட்சியின் அழுத்தம் இல்லாமல் தன்னிச்சையாக ஒன்றிய அரசு தடை செய்தது என்று சொல்வதை நம்ப நாங்கள் ஒன்றும் மூடர்கள் இல்லை.

அப்போ ஒன்றிய அரசை தமிழ்நாட்டு திமுக அரசை விட, நாம் தமிழர் கட்சியே கடுமையாக எதிர்க்கிறது என்று ஒத்துக்கொள். நாம் தமிழர் பிஜேபி பி டீம் என்று சொல்லிக் கொண்டு இனிமேல் உருட்டாதிங்க.." என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

மிமிக்ரி: சீமான் கட்சி ஆரம்பித்து, இத்தனை வருடங்களில், பாஜகவின் பி-டீம் என்றே விமர்சிக்கப்பட்டு வருகிறார்.. இத்தனைக்கும் பாஜகவை சரமாரியாக, மேடைக்கு மேடை சீமான் விமர்சித்து கொண்டிருக்கிறார்.. சில சமயம், பிரதமர் மோடி பேசுவதை போலவே மிமிக்ரியும் செய்து காட்டி, பாஜகவின் செயல்பாட்டை கடுமையாக தாக்கி பேசுவார்.. எனினும், பாஜகவின் பி-டீம் என்ற பெயரை முழுமையாக சீமானால் துடைத்தெறிய முடியவில்லை.

இதற்கு நடுவில், பாஜகவின் பி-டீம் திமுகதான் என்று சீமான் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.. சமீபத்தில் பிரதமர் மோடி சென்னை வந்ததிருந்தபோது, முதல்வர் ஸ்டாலினிடமும், அமைச்சர் உதயநிதியிடம் நெருக்கமாக பேசியிருந்தார்.. இதை அதிமுக தவிர மற்ற கட்சிகள் விமர்சித்தன.. அப்போது, நாம் தமிழர் கட்சி சீமான் ஒரு படிமேலே போய், திமுகவின் கள்ளக்காதலிதான் பாஜக என்று ஒரே போடாக போட்டார்..

கள்ளக்காதலி: "திமுக - பாஜகவுக்கும் இடையே திரைமறைவில் தொடர்பு இருக்கிறது, பிரதமர் மோடி சென்னையில் வருகையின்போது அது வெளிப்படையாகவே புரிந்திருக்கும்.. காங்கிரஸை எல்லாருக்கும் தெரிஞ்சு கல்யாணம் பண்ணி வெச்சிருக்காங்க.. பிஜேபியை கள்ளக்காதலியா வெச்சிருக்காங்க.. பொண்டாட்டி வீட்டுக்கு கார் போகிறது போல் தெரியும், டபக்குன்னு திரும்பி அப்படியே திரும்பி கள்ளக்காதலி வீட்டுக்கு அந்த கார் போய்விடும்.. அதான் இவங்க.. பார்த்தீங்க இல்ல என்ன நடந்ததுன்னு.. மொத்தமா போய் அங்கே விழுந்துட்டாங்க'' என்று சீமான் விமர்சித்திருந்தார்.

B - டீம்: இப்படி பாஜகவின் பி-டீம் திமுக என்றும், நாம் தமிழர் கட்சிதான் என்றும் மாறி மாறி விமர்சனங்கள் எழுந்துவரும் சூழலில், சீமானின் ட்விட்டர் தளம் முடக்கப்பட்டுள்ளது.. இதை காட்டமாக திமுக விமர்சிக்க, திமுகவை காளியம்மாள் விமர்சிக்க, ட்விட்டர் களமே அல்லோலகல்லப்பட்டு கொண்டிருக்கிறது.. உண்மையிலேயே யார் யாருடைய B-டீம்???

காவல்துறை: இதனிடையே, சீமான் ட்வீட்டர் கணக்கை முடக்க சென்னை காவல்துறை பரிந்துரை செய்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்த துவங்கி விட்டது.. இதையடுத்து, சீமான் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் டுவிட்டர் கணக்கை முடக்க பரிந்துரை செய்யவில்லை என்று சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+