டிடிஎப் வாசன் பற்ற வைத்த நெருப்பு.. யார் இந்த பூமர் அங்கிள்? விளக்கமாக பதிவிட்ட மனுஷ்யபுத்திரன்
சென்னை: யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு 2K கிட்ஸுகளின் ஆதரவு அதிகம் இருப்பதாக விவாதம் தொடங்கி, 90s கிட்ஸ், 2k கிட்ஸ், பூமர் அங்கிள்கள் என விவாதங்கள் சமூக வலைதளங்களில் நீண்ட வண்ணம் உள்ளன.
Recommended Video
அந்த வகையில் பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பூமர் அங்கிள் பற்றி பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார். அவரது அந்த பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் வந்தவிதமாக உள்ளன.

அவரது பதிவு,
"பூமர் அங்கிள்கள் வாழ்க்கையில்
சந்தோஷங்கள் உண்டா என்று
சரியாகத் தெரியவில்லை
ஆனால் சந்தோஷங்கள் என
அவர்கள் நம்புபவை ஏராளம் உண்டு
பூமர் அங்கிள்கள்
பூக்கள் பூக்களை முத்தமிடுவதை
திரையில் கண்டு பரவசம் அடைபவர்கள்
தங்கள் முதல் காதலிக்காக இன்னும் அழுபவர்கள்
பூமர் அங்கிள்கள்
கூட்டுக் குடும்பங்களின்
ரகசியத் தாம்பத்தியங்களில்
அதிசயமாக குழந்தைபெற்று வளர்ப்பவர்கள்
குடும்பச் சண்டைகளில்
எந்தப் பக்கம் சாய்வதென்று தெரியாமல்
குழம்பிப் போகிறவர்கள்
பூமர் அங்கிள்கள்
காலில் விழுந்து வணங்கும் மனைவி
உண்மையாகவே தன்னை மதிக்கிறாள் என
அப்பாவியாய் அகம்பாவம் கொள்பவர்கள்
பூமர் அங்கிள்கள்
சாலை விதிகளை மதிப்பவர்கள்
ஹெல்மட் போடுவதில் நம்பிக்கை உள்ளவர்கள்
முட்டிக்குக் கீழ் கிழிந்த பேண்டுகளைக் கண்டு
எரிச்சல் அடைபவர்கள்
பத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டாம் வகுப்பு
தேர்வுக் காலங்களில்
கேபிள் டிவி வயரை அறுப்பவர்கள்
பைக்கில் முகத்தை மூடிக்கொண்டு
ஒரு பையனின் தோளைப்
பிடித்துகொண்டுபோகும் பெண்
தனது மகள்தானா என பிரமை அடைபவர்கள்
பூமர் அங்கிள்கள்
சரவண பவனில் ஒரு காஃபியை
தன் அலுவலக தோழியுடன்
பதட்டத்துடன் அருந்துகிறவர்கள்
தன் மனைவியால் எந்த சந்தோஷமும் இல்லை என
அந்தத் தோழியின்
காதல் இரக்கத்தைப் பெற முற்படுகிறவர்கள்
'பில்' லை ஒருமுறைக்கு இருமுறை சோதித்துவிட்டு
பணம் செலுத்துபவர்கள்
இங்கிரிமெண்ட் மற்றும் அரியர்ஸ் பற்றி
ஓயாமல் பேசுகிறவர்கள்
பூமர் அங்கிள்கள்
சினிமாவில் கண்ணதாசன் வரிகளுக்கு
இன்னும் அழுபவர்கள்
சிவாஜி கணேசனைப்போல
ஒரு நடிகன் இனி பிறக்கமுடியாது என
இன்னும் உறுதியாக நம்புகிறவர்கள்
ஸ்ரீதேவியை மறக்க முடியாதவர்கள்
இளம் வேலைகாரிகளிடம்
மிகுந்த பரிவு காட்டுகிறவர்கள்
பூமர் அங்கிள்கள்
தொலைகாட்சி விவாதங்களைப் பார்ப்பவர்கள்
வாட்ஸப் செய்திகளை பொறுப்பாக
'பார்வர்ட் ' செய்பவர்கள்
இலக்கியக்கூட்டங்களில் கடைசிவரை
பொறுமையாக அமர்ந்திருப்பவர்கள்
சாலையைக் கடக்க மிகவும் யோசிப்பவர்கள்
பூமர் அங்கிள்கள்
அனிருத் போஸ்டருக்கு சாணி அடித்துவிட்டு
இளைய ராஜா பல்லக்கை
ஆனந்தமாய் தூக்கிக்கொண்டு நடக்கிறார்கள்
நரைக்கத் துவங்கிவிட்ட தலையில்
ஒவ்வொரு முடியாக பிடுங்குகிறார்கள்
முப்பது வயதிலிருந்து
இனி தனக்கு திருமணமே நடக்காதா என்ற
துக்கத்தில் மூழ்கியிருக்கிறார்கள்
பூமர் அங்கிள்கள்
வேலைக்குப் போகிறவர்கள்
மேலதிகாரியிடம் திட்டு வாங்குகிறவர்கள்
சிறிய செலவுகளுக்கு கணக்கு எழுதவேண்டியவர்கள்
வீட்டுக் கடன் கட்ட வேண்டியவர்கள்
பையனுக்கு அதிவேக சிசி பைக்
கடனில் எடுத்துத் தந்துவிட்டு
அவன் அதிவேகத்தில் செல்வது பற்றி புலம்புகிறவர்கள்
பூமர் அங்கிள்கள்
தொப்பையுடன் காலை நடைக்கு செல்பவர்கள்
அருகம்புல் ஜீஸ் அருந்துகிறவர்கள்
ராணுவ ஆட்சி வரவேண்டும் என்று நம்புகிறவர்கள்
ஒரு பெக் விஸ்கிக்கு
பாக்குப்போட்டுகொண்டு
சத்தம்போடாமல் வீட்டில் வந்து
படுத்துக்கொள்பவர்கள்
கிழிந்த ஜட்டிகளை
இன்னும் கொஞ்சநாள் ஓடட்டும் என்று
தொடர்ந்து உபயோகிப்பவர்கள்.
பூமர் அங்கிள்
அவர்களுக்கான செலவை
அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது
மற்றவர்களின் செலவையும்
அவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது
பூமர் அங்கிள்களை
பூமர் அங்கிள் என்று கேலி செய்பவர்கள்
எல்லாவற்றையும் பார்த்து சிரிக்கிறார்கள்
வெறுமனே சிரிப்பதைத் தவிர
அவர்கள் செய்வதற்கு
அவர்கள் உலகில் எதுவுமே இல்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications